சென்னை,
ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி மற்றும் லேடி சிவசாமி அய்யர் பள்ளி ஆகியவை சார்பில் மாநில அளவிலான பெண்கள் மற்றும் பள்ளி அணிகள் கைப்பந்து போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். அணி 25-17, 25-16 என்ற நேர்செட்டில் எஸ்.டி.ஏ. டி. அணியை தோற்கடித்தது.
மற்ற ஆட்டங்களில் பி.கே.ஆர். அணி 15-25, 25-12, 25-23 என்ற செட் கணக்கில் பாரதியாரையும், ஐ.சி.எப். அணி 25-16, 25-12 என்ற நேர்செட்டில் டாக்டர் சிவந்தி கிளப்பையும் வீழ்த்தின. பள்ளி அணிகள் பிரிவில் ஆவடி அரசு பள்ளி அணி 17-25, 25-21, 25-23 என்ற செட் கணக்கில் ஜி.எஸ்.பி.டி. அணியை வென்றது.