ஹூப்பள்ளி : “ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை வழக்கில், காங்கிரசாரே வக்கீலாக, நீதிபதியாக ஆக வேண்டாம். விசாரணையால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.ஹூப்பள்ளி விமான நிலையத்தில் அவர் நேற்று கூறியதாவது:சந்தோஷ் பாட்டீல் வழக்கில், விசாரணை அதிகாரிகள், வக்கீல்கள், நீதிபதிகள் என அனைவரும், காங்கிரஸ் தலைவர்களாக மாறி உள்ளனர்.
இவ்வழக்கை சுதந்திரமாக விசாரணை நடத்த விட வேண்டும்.தேவையின்றி குழப்பத்தை உருவாக்க வேண்டாம். விசாரணை அறிக்கை வந்த பின், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.டி.எஸ்.பி., கணபதி தற்கொலை வழக்கில், போலீசாரை அல்லது சி.பி.ஐ.,யோ, அன்றைய அமைச்சர் ஜார்ஜை கைது செய்யவில்லை. அதற்கான அவசியம் உள்ளதா என்பதை, போலீசார் முடிவு செய்வர். காங்கிரசாருக்கு இவ்வளவு பயம் ஏன்; உண்மை வெளியே வரட்டும்.அமைச்சர் பதவியை, ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ததால், அரசுக்கு தர்ம சங்கடம், பின்னடைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஈஸ்வரப்பா குற்றமற்றவராக வெளியே வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement