மேற்குவங்கம் உள்பட 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி… 2 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி

டெல்லி: மேற்குவங்கம் உள்பட 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் மேற்குவங்க பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. 4 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கும், ஒரு இடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், மற்றொரு இடமான பீகாரில் எதிர்க்கட்சி கூட்டணிக்கும் கிடைத்துள்ளது. மேற்குவங்க பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட மம்தா கட்சி வேட்பாளார் சத்ருகன் சின்ஹா அமோக வெற்றி பெற்றுள்ளார்.

மேற்குவங்கம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், பீகார் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருந்த தொகுதிகளுக்கும், மேற்குவங்கத்தில் காலியாக இருந்த பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில், 4 மாநிலங்களிலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. 4 எல்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.பி. தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது.

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்ற நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

பீகாரில் பக்சோஹன் தொகுதியில் பாஜக வேட்பாளரை 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளர் தோற்கடித்தார். இது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ வெற்றிபெற்றார். பாபுல் சுப்ரியோ வென்ற பல்லிகஞ்ச் தொகுதியில் மார்க்சிஸ்ட் 2ம் இடத்தை பிடித்தது; பாஜக 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

அதுபோல  மேற்குவங்கத்தில் எம்.பி. தேர்தலில் திரிணாமுல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா 2.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

சத்திஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்  நடைபெற்ற சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.