மேற்குவங்க அசன்சோல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மம்தா வேட்பாளர் சத்ருகன் சின்ஹா அமோக வெற்றி…

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல்  பாராளுமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சத்ருகன் சின்ஹா அமோக வெற்றி பெற்றார். அதுபோல சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் மம்தா கட்சி வேட்பாளர் பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார்.

 ஏப்ரல் 12 ஆம் தேதி 4 மாநில சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிகாரின் போச்சான், மகாராஷ்டிரத்தின் கோலாப்பூர்  சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

அசன்சோல் மக்களவைத் தொகுதியில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹாவும், பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வான அக்னிமித்ரா பவுலும் போட்டியிட்டார். அங்கு கடுமையலான போட்டி நிலவியது. தேர்தலின்போது சில இடங்களில் வன்முறையும் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  காலை முதலே திரிணாமுல் வேட்பாளர் சர்கன் சின்ஹா முன்னணியில் வந்த நிலையில், சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சத்ருகன் சின்ஹா 6.25 லட்சத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்றார். அடுத்த இடத்தில் பாஜக வேட்பாளர் அக்னி மித்ரா பவுல் 3.45 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப்  பெற்றுள்ளார்.

அதுபோல,  மேற்கு வங்காளத்தின் பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.