ரஷ்யாவின் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதையடுத்து மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரில் மோஸ்கவா கப்பல் தீப்பிடித்து மூழ்கியதாக கூறப்பட்டுள்ளது. நேட்டோ படைகளின் உள்கட்டமைப்பை எதிர்த்து போரை நடத்த வேண்டியிருப்பதாகவும், மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது நிச்சயம் என்றும் தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ படைகள் போரில் கலந்து கொள்ளாமலேயே ரஷ்யா பேரிழப்பை சந்தித்துள்ளது. இந்தப் போரில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர்.
500 பீரங்கிகள், 82 விமானங்கள், 2 ஆயிரம் வாகனங்களை ரஷ்யா இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.