உக்ரைன் போரில் இங்கிலாந்தின் “விரோதமான” நிலைப்பாட்டின் காரணமாக, அந்நாட்டு பிரதமர்
போரிஸ் ஜான்சன்
மற்றும் பிற மூத்த அமைச்சர்கள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது.
வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ், பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் மற்றும் 10 மூத்த அரசியல்வாதிகள், பெரும்பாலும் பிரிட்டன் அமைச்சரவை உறுப்பினர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளனர். உக்ரைனை போருக்கு பிறகு
ரஷ்யா
மீது பிரிட்டன் விதித்துள்ள தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீதும் இதேமாதிரியான தடையை ரஷ்யா விதித்தது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகள் மீது ரஷ்யாவும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.
அந்த வகையில், ரஷ்யாவுக்குள் நுழைய
பிரிட்டன் பிரதமர்
போரிஸ் ஜான்சனுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் -ரஷியா போர்… ஐ.நா. சபை அதிர்ச்சி தகவல்!
முன்னதாக பிரதமர் இல்லத்தில் கொரோனா விதிகளை மீறி விருந்து நிகழ்ச்சி நடத்திய விவகாரம் அந்நாட்டில் பூதாகரமானது. ஐந்து வயது சிறுமி ஒருவர் கூட இந்த விவகாரத்தை பற்றி பேசியது வைரலானது நினைவிருக்கலாம். இந்த விவகாரத்தில் போரிஸ் ஜான்சன் பதவியை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவுக்குள் நுழைய அவருக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.