ஐபிஎல் கிரிக்கெட்டில் 26 லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். மும்பை அணியின் பந்து வீச்சை லக்னோ அணி பேட்டர்கள் நான்கு திசைகளிலும் விளாசி தள்ளினர். 13 பந்தில் 1 சிக்சர் 4 பவுண்டரிகள் அடித்த டி காக் 24 ரன்னில் ஆலன் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த மனீஸ் பாண்டே 29 பந்தில் 38 ரன்கள் விளாசி வெளியேறினார்.
ஒரு முனையில் சிறப்பாக விளையாடி வந்த கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார். அடுத்த வந்த ஸ்டோனிஸ் 10 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக ராகுலுடன் ஹூடா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். பவுண்டரி சிக்சர்களுமாக பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடி வந்த கேஎல் ராகுல் 56 பந்தில் சதம் அடித்து அசத்தினார். ஐபிஎல் தொடரில் இது அவருக்கு 3-வது சதம் ஆகும்.
தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. இமாலய இலக்குடன் களமிறங்கும் மும்பை அணி தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.