ரியால்டி துறையை சேர்ந்த 9 பங்குகளை வாங்கலாம்.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை..!

சமீப காலமாக பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகமாக காணப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சந்தையானது ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.

இதற்கிடையில் சந்தையானது எப்போதெல்லாம் சரிகின்றதோ? அப்போதெல்லாம் நல்ல நிறுவன பங்குகளை வாங்கி வைக்கலாம். அது நீண்டகால நோக்கில் லாபகரமானதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்த 8 ரியால்டி பங்குகளை பற்றியும், ஏன் அந்த பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இது சுமார் எவ்வளவு லாபம் கொடுக்கலாம், மற்ற விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சீரிஸ் 2 :பங்கு வெளியீடு என்றால் என்ன.. செகண்டரி சந்தை என்ன செய்கிறது.. இது லாபகரமானதா?!

பங்கு பரிந்துரை

பங்கு பரிந்துரை

டிஎல்எஃப்(DLF) – இலக்கு விலை – ரூ.486

ஓபராய் ரியால்டி (Oberoi Realty) – இலக்கு விலை – ரூ.1142

ஃபீனிக்ஸ் மில்ஸ் (Phoenix Mills) – இலக்கு விலை – ரூ.1364

பிரிகேட் எண்டர்பிரைசஸ் (Brigade Enterprises) – இலக்கு விலை – ரூ.619

பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் (Prestige Estates) – இலக்கு விலை – ரூ.633

மஹிந்திரா லைஃப்ஸ்பேசஸ் (Mahindra Lifespaces ) – இலக்கு விலை – ரூ.473

ஷோபா டெவலப்பர்ஸ் (Sobha Developers ) – இலக்கு விலை – ரூ.1000

கோல்டே பாட்டீல் டெவலப்பர்ஸ் (Kolte-Patil Developers) – இலக்கு விலை – ரூ.381

கோத் ரேஜ் ப்ராபர்டீஸ் (Godrej Properties)- இலக்கு விலை – ரூ.1804

வலுவான தேவை இருக்கலாம்

வலுவான தேவை இருக்கலாம்

டயர் 1 நகரங்களில் உள்ள டெலவப்பர்கள் தொடர்ந்து வலுவான தேவையை காண்பார்கள். கடந்த 4வது காலாண்டு என்பது முடக்கப்பட்ட ஒரு காலாண்டாக இருந்தாலும், நடப்பு காலாண்டில் வேகம் அதிகரிக்கலாம். தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பிரெஸ்டீஜ், ஓபராய், மஹிந்திரா லைஃப் வலுவான செயல்பாட்டினை காணலாம் என்றும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

மலிவு விலை தேவை
 

மலிவு விலை தேவை

அதே நேரம் எந்த காலகட்டத்திலும் மலிவு விலைக்கு என்றுமே வலுவான தேவையானது இருந்து வருகின்றது. ஆக அது சார்ந்த டெவலப்பர்களும் வலுவான வளர்ச்சியினை காணலாம். மேலும் தற்போது வரையிலும் கூட வட்டி விகிதம் என்பது குறைவாகவே உள்ளது. இதுவும் தேவையை ஊக்கவிக்க காரணமாக அமையலாம்.

சாதகமான காரணிகள்

சாதகமான காரணிகள்

மேலும் பொருளாதாரமும் வலுவான வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. ஆக இதுவும் தேவையினை ஊக்குவிக்கலாம். ஆக இதுவும் ரியால்டி பங்கினில் நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக வட்டி விகிதமே அதிகரித்தாலும் அது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தாது என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆக நீண்டகால நோக்கில் மேற்கண்ட ரியால்டி பங்குகளின் விலையானது அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

HDFC securities recommends these 9 realty stocks to buy: check details

HDFC securities recommends these 9 realty stocks to buy: check details/ரியால்டி துறையை சேர்ந்த 9 பங்குகளை வாங்கலாம்.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை..!

Story first published: Saturday, April 16, 2022, 8:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.