வட்ட வடிவ சப்பாத்தி… அட இது இவ்வளவு ஈசியா?

Tamil Chapathi Recipe Making Easy Way : இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் முக்கியமானது சப்பாத்தி. குறிப்பாக வட இந்தியாவில் மக்கள் முழுநேர உணவாக சப்பாத்தியை உணவாக எடுத்துக்கொள்கின்றனர். கோதுமை மாவில் செய்யப்படும் இந்த சப்பாத்தி அதிக நன்மைகளை கொண்டுள்ளது.ஆனால் இந்த சப்பாத்தி செய்யும்போது பலருக்கு சரியான பதத்தில் வருவதில்லை.

மாவு பிசைவது சப்பாத்தி கட்டையில் தீட்டுவது உள்ளிட்ட வேலைகளில், சரியான முறையில் செல்லவில்லை என்றால் சப்பாத்தி செய்து முடித்து சாப்பிடும்போது அதன் மேல் உள்ள ஆசையே போய்விடும். ஆனால் சில எளிய வழிமுறையின் மூலம் சப்பத்தியை சரியான முறையில் சமைக்கலாம்.

கோதுமை மாவுடன் தண்ணீர் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்தக்கொள்ள வேண்டும்.

கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கோண்டு மாவை முழுவதுமான பிசைந்து முடித்தவுடன், ஊறவைக்கவும்.

சிறிது நேரம் கழித்து மாவை எடுத்து இடிப்பது போன்று நன்றாக அடித்து எடுத்தக்கொள்ளவும். இப்படி செய்யும்போது சப்பாத்தி சாஃப்டாக வரும்’.

அதன்பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு இந்த உருண்டைகளை நன்றாக கையில் உருட்டி ரவுண்ட் ஷேப்பில் வைத்துக்கொள்ளவும்.

இந்த உருண்டைகளை சிறிதளவு மாவில் வைத்து எடுத்து சப்பாத்தி கட்டையை வைத்து நன்றாக உருட்டவும். அனைத்து பக்கத்திலும் சரியான அளவில் வரும் படி உருட்டி எடுத்துக்கொள்ளவும்.

இதில் முதலில் நீள் வட்டதாக தேய்த்துக்கொள்ளவும். அதன்பிறகு அதற்கு எதிர் திசையில் தேய்க்கவும்.. இப்படி மாற்றி மாற்றி தேய்க்கும்போது சப்பாத்தி ரவுண்ட் ஷேப்பில் சரியான வடிவடித்தில் கிடைக்கும்.

சப்பாத்தியை தேய்க்கும்போது நடுவில் கொஞ்சம் மொத்தமாகவும், சைடில் கொஞ்சம் சன்னமாகவும் இருக்க வேண்டும்.

ரொம்ப எளிதான இந்த முறையை அனைவரும் முயற்சி செய்து வட்டவடிவிலான சப்பாத்தியை சாப்பிட்டு மகிழலாம்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.