இங்கிலாந்து பிரதமர் பதவி ரேஸில் மிகவும் பின்தங்கியிருக்கிறார் ரிஷி சுனக். இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ரிஷி சுனக், இங்கிலாந்தின் முதன்மைப் பதவியை அடையும் வாய்ப்பு கடந்த மாதம் வரை பிரகாசமாக இருந்தன. ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதாவின் கணவரான அவருக்கு எதிராக அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகள் இப்போது பிரதமர் கனவை தவிடுபொடியாக்கியுள்ளன.