ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகிய டெலிகாம் நிறுவனங்கள், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவைத் தொடர்ந்து, தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல திட்டங்களை அறிவித்தன. அதாவது, டிராய் உத்தரவின்படி, ஒரு மாதம் செல்லுபடியாகும் 3 திட்டங்கள், ரீசார்ஜ் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
தனியார் நிறுவனங்கள் இதுதொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை தங்களின் பட்டியலில் சேர்த்தது. ஆனால், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மட்டும், இந்த உத்தரவை நிறைவேற்றாமல் இருந்தது. தற்போது, நிறுவனம் புதிதாக 30 நாள்கள் செல்லுபடியாகும் புதிய 5 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு, பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டங்களை அறிமுகம் செய்ததாகத் தெரிவித்துள்ளது. நீங்கள் BSNL பயனராக இருந்தால், உங்களுக்கு 30 நாள்கள் செல்லுபடியாகும் பல விருப்ப திட்டங்கள் இப்போது கிடைக்கும்.
BSNL இன் அத்தகைய ஐந்து ரீசார்ஜ் திட்டங்களைக் குறித்து விரிவான தகவல்களை இன்று நாங்கள் உங்களுக்கு வழங்கப் போகிறோம். எது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதோ, அதனைத் தேர்வு செய்து நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். சில இடங்களுக்கு ஏற்ப இந்த திட்டங்கள் மாறுபடலாம். எனவே, ஒரு முறை தெளிவாக திட்ட விவரங்களை படித்த பின், ரீசார்ஜ் செய்து கொள்ளவும்.
டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம் – போட்டி ஆப்ஸ்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் ஆஃபர்கள்!
பிஎஸ்என்எல் ரூ.19 திட்டம் (BSNL 19 rs plan)
இது BSNL வழங்கும் மிக அடிப்படையான திட்டமாகும். உங்கள் சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க விரும்பினால் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் 30 நாள்கள் வேலிடிட்டி கிடைக்கும். கூடுதலாக, எந்த நெட்வொர்க்கிலும் நிமிடத்திற்கு 20 பைசாவில் அழைக்கு வசதி வழங்கப்படுகிறது. இதில் டேட்டா அல்லது எஸ்எம்எஸ் நன்மைகள் கிடையாது.
பிஎஸ்என்எல் ரூ.75 திட்டம் (BSNL 75 plan details)
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கு 200 நிமிடங்கள், 2GB மொத்த டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 30 நாள்கள் செல்லுபடியாகும். கூடுதலாக, தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோனையும் பயனர்கள் பெறுவீர்கள்.
ஏர்டெல் Vs ஜியோ Fiber broadband திட்டங்கள் – 4,000 GB வரை டேட்டா பலன்கள்!
பிஎஸ்என்எல் ரூ.147 திட்டம் (BSNL 147 plan)
இந்த திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், 10GB டேட்டா பலன்களை வழங்குகிறது. இந்த திட்டமும் 30 நாள்கள் செல்லுபடியாகிறது. கூடுதலாக, நீங்கள் BSNL ட்யூன்களுக்கான இலவச அணுகலையும் பெற முடியும். ஆனால், இந்த திட்டத்தில் எஸ்.எம்.எஸ் நன்மைகள் கிடைக்காது.
பிஎஸ்என்எல் ரூ.299 திட்டம் (BSNL 299 plan)
வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மொத்தம் 90GB டேட்டா நன்மைகள் கிடைக்கின்றன. 30 நாள்கள் வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் இந்த திட்டத்தில் அடங்கியிருக்கிறது. ஆனால், ரூ.299 திட்டத்தில் வேறு ஓடிடி நன்மைகள் போன்ற கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை.