இன்ஸ்டன்ட் செய்தி பகிரும் தளமான
வாட்ஸ்அப்
செயலியை உலகளவில் அதிகளவு பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். மெட்டா நிறுவனமும் வாட்ஸ்அப் தளத்தை புதிய அம்சங்கள் கொண்டு புதுபித்துக் வருகிறது.
இதன்மூலம், குரல் அழைப்பு, வீடியோ அழைப்புடன் முக்கியமான புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகளைப் பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். பிற மெசேஜிங் ஆப்ஸுடன் ஒப்பிடும்போது வாட்ஸ்அப் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருப்பதே, பயனர்கள் அதிகம் விரும்புவதற்கான காரணம். இருப்பினும், வாட்ஸ்அப்பில் செய்யப்படும் தவறு உங்களுக்கு அதிக விலை கொடுக்கலாம். இது உங்களை கைதியாக மாற்ற வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம்.
அடிக்குற வெயிலுக்கு ஏசி வேணும் தான் – அதுக்காக இதெல்லாம் தெஞ்சுக்காம இருக்கக் கூடாது!
வாட்ஸ்அப்பில் பகிரும் செய்தி, ஏன் உங்களை சிறைக்கு அனுப்புகிறது என்று தெரியுமா?
வாட்ஸ்அப் பயன்படுத்தினால் சிறை தண்டனை எப்படி? இப்படி ஒரு கேள்வி உங்கள் மனதில் தோன்றி இருக்கலாம். வாட்ஸ்அப் மூலம் பலருடன் தொடர்பு கொள்கிறோம். மேலும், நாம் பல குழுக்களுடன் ஆக்டிவாக இணைக்கப்பட்டுள்ளோம். அறியாதவர்களை உள்ளடக்கிய பல குழுக்களும் நமது வாட்ஸ்அப் புரொபைலில் இருக்கும்.
எனவே, அத்தகைய குழுவிற்கு செய்தி, புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்பும் முன், நீங்கள் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், மனதை புண்படுத்தும் வகையில் செய்தி அனுப்பினால், காவல்துறை உங்களை அலேக்காகத் தூக்கி கம்பி எண்ண வைத்துவிடும்.
செய்தி பகிரும் கொள்கைகளில் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, விதிமுறைகளை மீறும் பயனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன்னறிவிப்பு இன்று தவறாக செயல்படும் கணக்குகளையும் நிறுவனம் தடை செய்கிறது.
இத மட்டும் செய்யாதீங்க – முடக்கப்படும் Whatsapp கணக்குகள்!
எந்த செய்தி உங்களை சிறைக்கு அனுப்பும்!
நீங்கள் ஏதேனும் ஒரு குழுவைச் சேர்ந்தவராக இருந்தால், அந்தக் குழுவில் வெவ்வேறு சித்தாந்தங்கள், மதங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம். எனவே, நீங்கள் அனுப்பும் சுயசிந்தனை செய்திகள் அல்லது புகைப்பட-வீடியோ மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்.
இனவாத, வெறுக்கத்தக்க பதிவுகளை WhatsApp இல் பகிர்வதைத் தவிர்க்கவும். நீங்கள் பகிரும் செய்திக்கு ஒருவர் ஆட்சேபனை தெரிவித்தால், நீங்கள் பகிர்ந்த செய்தி குறித்து காவல் துறையினரிடத்தில் புகார் செய்யலாம். மேலும், செய்தி அனுப்பியவர் மற்றும் குழு நிர்வாகியை காவல் நிலையத்திற்கு அழைக்கலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீங்கள் சிறைக்கு அனுப்பப்படலாம். எனவே வாட்ஸ்அப்பில் எந்த செய்தியையும் அனுப்பும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து அனுப்புங்கள். வாட்ஸ்அப்பில் ஆபாசமான உள்ளடக்கம், வன்முறை செய்திகள், தேச விரோத தகவல்கள், அவதூறு செய்திகளை அனுப்ப வேண்டாம். கட்டாயமாக இவற்றை பின்பற்றவில்லை என்றால், சிறைவாசம் தான் முடிவாக அமையும்.