ஹர்பஜன் சிங் கடந்த மாதம் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மேலவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஹர்பஜன் சிங், ராஜ்யசபா உறுப்பினர் என்ற முறையில் நாட்டின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று ராஜ்யசபா உறுப்பினர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் மேற்கொண்டு கூறியதாவது:-
ராஜ்சபா உறுப்பினராக விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலனுக்காக எனது சம்பளத்தை பங்களிக்க விரும்புகிறேன். நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க நான் சேர்ந்துள்ளேன். என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஜெய் ஹிந்த்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் ராஜினாமா