வீட்டில் இருக்கிற இட்லி மாவை இந்த ஜிலேபி ஸ்வீட்டை ஈஸியா செய்யலாம். ஜிலேபி ஸ்வீட் எல்லோருக்குமே மிகவும் பிடித்தமான இனிப்புப் பலகாரம் ஆகும். வாங்க, ஜிலேபியை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
புளித்த இட்லி மாவு – ஒரு கப்
கேசரி பவுடர் – 1/2 ஸ்பூன்
மைதா மாவு – 1 1/4 கரண்டி
எண்ணெய் – வறுக்க
பாகு தயாரிக்க :
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – 1 கப்
எலுமிச்சை – 1/2
செய்முறை:
2 அல்லது 3 நாள் ஆன நன்கு புளித்த அரிசி மாவு தேவைப்படும். அதில் கேசரி பவுடரை சேர்த்துக்கொள்ளவும்.
Kitchen Tips; ராகி’யில் விஷமிகுந்த ரோடமைன் சாயம் கலப்படம்.. எப்படி கண்டுபிடிப்பது என்பது இங்கே!
பின் அதில் மைதா சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு கரைத்துக் கொள்ளவும். மற்றொரு புறம் பாகு தயாரிக்க தண்ணீரில் சர்க்கரை ஊற்றி கொதிக்க வையுங்கள். அதில் எலுமிச்சை சாறு பிழிந்துகொள்ளுங்கள்.
தற்போது கரைத்து வைத்துள்ள மாவை கோதுமை கவர் அல்லது ஏதேனும் ஃபுட் பாக்கெட்ஸ் இருந்தால் அதில் மாவை ஊற்றி அதன் அடி முனையில் சிறு துளையிட்டுக் கொள்ளுங்கள். இது ஜிலேபி முறுக்கலுக்கு உதவும்.
தற்போது கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை இரண்டு சுத்து முறுக்கு போல் சுற்றி எடுங்கள்.
பின் பொண்ணிறமாக வந்ததும் அப்படியே எடுத்து சர்க்கரை பாகில் போட்டுவிடுங்கள். 5 நிமிடங்கள் ஊறினால் போதும். நீண்ட நேரம் ஊற விட்டால் மொறுமொறுப்பு போய்விடும்.
அவ்வளவுதான் சுவையான ஜிலேபி தயாராகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “