இப்போது நீங்கள் குறைந்த விலையில் திரைப்படங்கள் மற்றும் தொடர்களை அனுபவிக்க விரும்பினால், டாடா நிறுவனத்தால் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகக் குறைந்த விலையில் OTT சேவைகளை வழங்கும் திட்டத்தை Tata Play அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்காக பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட இந்த திட்டம் Binge Starter Pack என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விலை ரூபாய் 49 மட்டுமே என்பது கூடுதல் சிறப்பு. திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாள்கள் ஆக உள்ளது. மொபைல் சாதனங்களுக்கு OTT உள்ளடக்கத்தை வழங்கும் மலிவான திட்டம் இதுவாகும்.
இந்த திட்டத்தில் நிறுவனம் Eros Now, Hungama, Sheromee, Zee5 ஆகிய OTT தளங்களுக்கான இலவச சந்தாக்கள் கிடைக்கிறது. இத்திட்டத்தை குழுவாக சேர்ந்து ஓடிடி பயன்களை அனுபவிக்கலாம் என்பது கூடுதல் வசதியாகப் பார்க்கப்படுகிறது. பயனர்கள் இந்த OTT பயன்பாடுகளை
Tata Play Binge
செயலியின் மூலம் அணுகலாம்.
ஏசி மார்கெட்டிலும் கால்பதித்த Realme நிறுவனம் – மூன்று ஏசிக்கள் அறிமுகம்!
7 நாள்கள் இலவச சோதனையைப் பெறுங்கள்
இந்த ரூ.49 ஸ்டார்டர் பேக்கில், நிறுவனம் 7 நாள் சோதனை மற்றும் ஒரே நேரத்தில் மூன்று மொபைல் சாதனங்களுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த பேக்கைச் செயல்படுத்திய பிறகு, பயனர்கள் குறிப்பிட்ட ஓடிடி தளங்களில் கிடைக்கும் வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை பார்த்து அனுபவிக்க முடியும்.
இருப்பினும், திட்டத்தில் குழு உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு முன், இது ஒரு மொபைல் திட்டம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த திட்டத்தின் மூலம் டிவியில் வெப் தொடர்களை ஸ்ட்ரீமிங் செய்ய முடியாது. கூடுதலாக, இந்த ஆப்ஸின் உள்ளடக்கத்தைப் பார்க்க மொபைலில் Tata Play Binge செயலி நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
ஏசி முதல் டைனிங் டேபிள் வரை… மலிவு விலையில் மாதத் தவணை!
DTH இணைப்பு தேவை
பிற Binge திட்டங்களைப் போலவே, நிறுவனத்தின் சமீபத்திய ஸ்டார்டர் பேக் பயனர்களுக்கும் கிடைக்கிறது. இதற்கு பயனரின் வீட்டில் ஆக்டிவாக உள்ள DTH இணைப்பு தேவை என்பதை மறந்து விட வேண்டாம். இது பயனர்கள் தங்கள் மொபைலில் உள்ள Tata Play Binge செயலியிலிருந்து வீடியோக்களை பார்க்க அனுமதிக்கும். வேறெந்த தளங்களும் வழங்காத பக்கா பிளானை டாடா ப்ளே அறிமுகம் செய்துள்ளது பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒருபுறம், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற OTT இயங்குதளங்களின் விலை அதிகம். எனவே, இப்போது டாடா ப்ளே குறைந்த விலை திட்டங்களை அறிமுகப்படுத்தி இந்த நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்துள்ளது. வெறும் ரூ.49 திட்டத்தில், பயனர்கள் பல OTT பயன்பாடுகளுக்கான சந்தாவை இதில் பெறுவதால், பலரும் இதனை தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.