டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 975 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி மற்று கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. சமீப வாரங்களாக தொற்று பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில், தற்போது ஆயிரத்துக்கும் கீழே குறைந்து உள்ளது. நேற்றை விட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா நிலவரம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக மேலும் 975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றை விட சற்று குறைவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,21,747ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 796 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,07,834 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை இந்தியாவில் 11,366 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 186.38 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 6,89,724 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.