வாட்ஸ்அப் நிறுவனம் வெவ்வேறு வாட்ஸ்அப் குழுக்களை ஒன்றாக இணைக்கும் ‘கம்யூனிட்டிஸ்’ அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த ‘கம்யூனிட்டிஸ்’ வசதி, இந்தாண்டு இறுதியில் தான் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குரூப்களுக்கு கூடுதல் சில வசதிகளையும் வாட்ஸ்அப் வழங்கியுள்ளது. 2ஜிபி சைஸ் ஃபைல் ஷேரிங் , ஆடியோ கால்களில் கூடுதல் நபர்கள் இணையும் வசதி, வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம், எமோஜி ரியாக்ஷன் அம்சம் ஆகியவை, ஓரிரு வாரங்களின் பயனர்களின் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
Reactions
வாட்ஸ்அப் தளத்தில் எமோஜிஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இனி, தங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு டைப் செய்து ரிப்ளை செய்வதை காட்டிலும், ரியாக்ஷன் மூலம் ஈஸியாக தெரிவிக்கலாம். இது பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு வழங்கும் ரியாக்ஷன் அம்சம் போலவே இருக்கும். தற்போது Facebook Messenger அல்லது Instagram இல், மெசேஜை லாங் பிரஸ் செய்தால் தான், ரியாக்ஷனஸ் விருப்பங்கள் திரையில் தோன்றும். வாட்ஸ்அப்பில் எப்படி வரும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Admin Delete
குரூப்களில் வரும் மெசேஜ்களை நீக்கும் அதிகாரம் குரூப் அட்மின்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் நோக்கம், குழுவில் பகிரப்படும் சர்ச்சையான மெசேஜ்களை நீக்குவது ஆகும்.
File Sharing
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றான, வாட்ஸ்அப்பில் 2ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்பும் வசதி நனவாகியுள்ளது. இதற்கு முன்பு, 100 எம் அளவிலான ஃபைல்களை மட்டுமே அனுப்பிட முடியும். வாட்ஸ்அப் போட்டி நிறுவனமான டெலிகிராம், 1.5 ஜிபி அளவிலான ஃபைல்களை அனுப்பிட அனுமதிக்கிறது.
Larger Voice Calls
இனி வாட்ஸ்அப் ஆடியோ கால் பேசும்போது 32 நபர்களை நீங்கள் இணைத்துக் கொள்ளலாம். தற்போது, 8 பேர் மட்டுமே அதிகப்பட்சமாக ஆடியோ காலில் இணைந்து கொள்ளமுடியும்.
Communities
வாட்ஸ்அப்பில் உள்ள குழுக்களுக்கு தங்கள் உரையாடல்களை ஒழுங்கமைக்கவும் நிர்வகிக்கவும் கூடுதல் கருவிகள் தேவைப்படுகிறது. அதன்பேரில் தான், கம்யூனிட்டு யோசனை செயல்படுத்தப்படவுள்ளது. கம்யூனிட்டிஸ் அம்சத்தின் மூலம் வெவ்வேறு வாட்ஸ்அப் குழுக்களை ஒன்றாக இணைக்கலாம்
உதாரணமாக, இந்த கம்யூனிட்டில் அம்சத்தின் மூலம் பள்ளி அளவில் பார்த்தால் மாணவர் குழு, பெற்றோர் குழு, தன்னார்வலர்கள் குழு மற்றும் உள்ளூர் அளவில் இயங்கும் கிளப் குழுக்களை ஒன்றாக இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குழுக்களை நிர்வகிப்பவர்கள் ஒரே மெசேஜ் மூலம் அனைவரிடத்திலும் தொடர்பு கொள்ள முடியும்
WhatsApp இல் ஒவ்வொரு சமூகமும் குழுக்கள் பற்றிய விளக்கமுமஇடம்பெற்றிருக்கும். அதனடிப்படையில், மக்கள் தேர்வு செய்துகொள்ளலாம். வாட்ஸ்அப் கூற்றுப்படி, இந்த அம்சம் பெரிய மற்றும் மிகவும் சிக்கலான குழுக்களிடையான உரையாடல்களுக்கு ஒரு கட்டமைப்பை அமைக்க உதவும் என கூறப்படுகிறது. கம்யூனிட்டிகளும் அந்தந்த குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கிடும்.
எதிர்காலத்தில், கம்யூன்ட்டில் உள்ள வெவ்வேறு குழுக்களில் உள்ள அனைவருக்கும் அனுப்பப்படும் மெசேஜ் அதிகாரம் அட்மின்களுக்கு வராலம். இந்த கம்யூனிட்டியில் எந்த வகையான குழுக்களை சேர்க்காலம் என அவர்கள் முடிவு செய்யும் வகையில் திட்டமிடலாம்.
கம்யூனிட்டி அட்மின்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும், அவர்களின் தனிப்பட்ட குழுக்களிடையே உரையாடல்களை நிர்வகிக்க புதிய கருவிகளை உருவாக்குவதாகவும் வாட்ஸ்அப் கூறுகிறது. தவறான விஷயத்தை புகாரளிப்பது, அக்கவுண்ட் பிளாக் செய்வது, குறிப்பிட்ட சமூகத்தில் இருந்து வெளியேறுவது போன்ற அதிகாரமும் பயனர்களுக்கு வழங்கப்படும்.
கம்யூனிட்டிகளில் வரும் மெசேஜ்கள் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ட் செய்யப்பட்டவை ஆகும். அதில், உங்களது மொபைல் நம்பர் மறைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.