சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள கைராகர், மராட்டியத்தில் உள்ள கோல்காபூர் வடக்கு ஆகிய 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. மராட்டிய மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரகாந்த் ஜெயந்த் ஜாதவ் கடந்த ஆண்டு கொரோனாவால் இறந்தார். இதையொட்டி கோல்காபூர் வடக்கில் இடைத்தேர்தல் நடந்தது. இங்கு போட்டியிட்ட மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மனைவி ஜெயஸ்ரீ ஜெயந்த் தொடக்கத்தில் இருந்தே முன்னணியில் இருந்தார்.
இதேபோல சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யசோதா சர்மா 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.