7.5% இடஒதுக்கீட்டின் கீழ், ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை வழங்கக் கோரிய 63 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் மனுவை தேர்வுக்குழு நிராகரித்த நிலையில், அதனை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி, 11 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் மனுதாரர் படித்துள்ளதாகவும், அவருக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை வழங்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டார்.