Environmental Disaster: எகிப்தில் இருந்து மால்டாவுக்கு டீசல் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல், துனிசியாவின் கடற்கரைக்கு அருகில் கவிழ்ந்த விபத்து மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.
சுற்றுச்சூழல் பேரழிவை உருவாக்கும் என்று அஞ்சப்படும் அந்தக் கப்பல் 750 டன் டீசலுடன் சென்றுக் கொண்டிருந்தபோது, துனிசியாவின் கடற்கரைக்கு அருகில் மூழ்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“சுற்றுச்சூழல் பேரழிவு” ஏற்படக்கூடிய நிலையில், எரிபொருள் நிரப்பப்பட்ட கப்பல் கவிந்த சம்பவம் துனிசியா கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை (2022 ஏப்ரல் 16) அன்று 750 டன் டீசலை கொண்டு சென்ற கப்பல் கேப்ஸ் வளைகுடாவில் மூழ்கியுள்ளதாக உள்ளூர் நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி AFP அறிக்கை தெரிவித்துள்ளது.
#International Merchant fuel ship sinks off Tunisia, crew rescued https://t.co/ZG1E5If6S5 pic.twitter.com/QmasWUUKhB
— Ultrascan MENA (@UltrascanMENA) April 16, 2022
“கப்பல் இன்று காலை துனிசிய கடல் பகுதியில் மூழ்கியது. இப்போதைக்கு கசிவு இல்லை. பேரிடர் தடுப்புக் குழு ஒன்று கூடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யும்” என்று மொஹமட் கர்ரே தெரிவித்தார்.
முன்னதாக, துனிசியாவில் உள்ள அதிகாரிகள் கப்பலில் கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், “சுற்றுச்சூழல் பேரழிவு” ஏற்படலாம் என்றும் கூறியிருந்தனர்.
மோசமான வானிலை காரணமாக வெள்ளிக்கிழமை மாலை துனிசிய கடற்பகுதியில் நுழைவதற்கு Xelo என்ற வணிகக் கப்பல் கோரியது என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | உக்ரைன் சமாதானப் பேச்சுக்கள் முட்டுச்சந்தை எட்டியுள்ளது: விளாடிமிர் புடின்
கப்பலின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அது கூறியுள்ளது. எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் தடுக்க “அவசர தேசிய தலையீட்டு திட்டத்தை” (urgent national intervention plan) சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாக்கியது.
உள்துறை, பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் சுங்க அமைச்சகங்கள் “பிராந்தியத்தில் ஒரு கடல் சுற்றுச்சூழல் பேரழிவைத் தவிர்ப்பதற்கும் அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும்” ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சககம் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு நிலைமை “கட்டுப்பாட்டில்” இருப்பதாக துனிசிய அரசு கூறுகிறது.
கப்பலில் இருந்த ஏழு பேர் கொண்ட பணியாளர்களை துனிசிய அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளது.
ஈக்குவடோரியல் கினியா கொடியுடன் கூடிய கப்பல் துனிசியாவின் தென்கிழக்கு கேப்ஸ் வளைகுடாவில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் தண்ணீரில் மூழ்கியது, இது தற்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன.
மேலும் படிக்க | ரஷ்யாவின் பொருளாதாரத்தை பாழாக்கும் கிரகங்களின் ராசி மாற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR