KGF படத்தை பார்த்த ரஜினி என்ன செய்த காரியத்தை பாருங்களே…!

2018 ம் ஆண்டு டைரக்டர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட ராக் ஸ்டார் கேஜிஎஃப் சாப்டர் 1 படம் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை கேஜிஎஃப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாக்கி உள்ளனர்.

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை
கொலை
செய்து கே.ஜி.எஃப்- யை யஷ் கைப்பற்றினார்.

பயில்வான் ரங்கநாதன் கேட்ட வில்லங்கமான கேள்வி: அஜித்தின் தரமான பதிலடி..!

அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யஷ். கே.ஜி.எஃப் பை பிடிக்க யஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யாஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இறுதியில் கே.ஜி.எஃப்பை யார் கைப்பற்றுகிறார்கள் என்பது தான் கதை.

படத்தை பார்த்த
ரசிகர்கள்
படத்தை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். படத்தை பார்க்க பார்க்க ஒவ்வொரு சீனும், கைத்தட்டல் பறந்துள்ளது.முதல் பார்ட்டே மெர்சல் , செக்கெண்ட் பார்ட் அதுக்கும் மேல
கொலமாஸ்
. படம்னா இதுதான் தமிழ் ஹீரோஸ் எல்லாம் இந்த படத்தைப்பார்த்து கத்துக்கனும். படத்துல மைனசுனு சொல்றதுக்கு எதுவுமே இல்லை சும்மா அடித்து தூக்கிட்டாங்கப்பா என ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில்நடிகர்
ரஜினி
நல்ல படங்களை பார்த்து அந்த கலைஞர்களை பாராட்டுவது வழக்கம். அதேபோல் சமீபத்தில்
பீஸ்ட்
திரைப்படம் பார்த்த ரஜினிகாந்த் இப்போது
Kgf 2
படத்தையும் பார்த்துள்ளார்.

பின் Kgf 2 பட தயாரிப்பாளரை போனில் தொடர்பு கொண்டு படக்குழுவினருக்கு நல்ல பாராட்டை கொடுத்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.