IPL 2022, MI vs LSG Highlights in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கிய 26வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல் – குயின்டன் டி காக் களமிறங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த டி காக் ஃபேபியன் ஆலன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களில் மணீஷ் பாண்டே 38 ரன்களிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 10 ரன்களிலும், தீபக் ஹூடா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடக்க வீரராக களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கே.எல். ராகுல் சதம் விளாசினார். 60 பந்துகளில் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என அதிரடி காட்டிய அவர் 103 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரின் அசத்தலான ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்துள்ளது. இதனால் மும்பை அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக உனட்கட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது மும்பை அணி 200 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வருகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆடும் லெவன்:
கே.எல். ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா, துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய்
மும்பை இந்தியன்ஸ் ஆடும் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ்.
Indian Premier League, 2022Brabourne Stadium, Mumbai 16 April 2022
Mumbai Indians 181/9 (20.0)
Lucknow Super Giants 199/4 (20.0)
Match Ended ( Day – Match 26 ) Lucknow Super Giants beat Mumbai Indians by 18 runs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“