Tamil News Live Update: ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை! – பிரதமர் மோடி

Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 10-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!

மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கள்ளழகர், பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரையில் அமர்ந்து, வைகை ஆற்றில் இன்று காலை எழுந்தருளினார். வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ளழகரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலே வைகை ஆற்றில் குவிந்தனர். 2 ஆண்டுகளுக்குப் பின் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதால் மக்கள் உற்சாகத்துடன், கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் சாமி தரிசனம் செய்தனர்.

நான் ஐபிஎஸ் படித்தேனா என்பதே திமுகவின் கவலை.. அண்ணாமலை!

நீட் விலக்கு உட்பட ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நரிக்குறவர் மக்களுக்கு பதவியளித்து அழகு பார்ப்பது பாஜக மட்டும்தான். மக்களுக்கு ஆசை காட்டி ஆட்சியில் அமர்ந்த திமுக தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் கவலைபடாமல் நான் ஐபிஎஸ் படித்தேனா என்பதே திமுகவின் கவலை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Tamil Nadu news live update

இலங்கைக்கு உதவ வசதி செய்துதர வேண்டும்.. ஸ்டாலின்!

இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மார்ச் 31ல் பிரதமரை சந்தித்தபோது, இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தேன். தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை கொழும்புவுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது  முதல்வர் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

IPL 2022: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் இலக்குடன் ஆடிய ஹைதராபாத் அணி, 17.5 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

பிரதமர் மோடி தலைமையில் மாநாடு!

6 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்.30ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில்  மாநில முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் வருகிற ஏப்.30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மத்திய மாநில அரசுகளின் நல்லுறவுகள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, மாநிலங்களின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படும். மேலும் முதல்வர்கள் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
11:58 (IST) 16 Apr 2022
செந்தில்பாலாஜிக்கு முதல்வர் புகழாரம்

ஓராண்டில் ஒரு லட்சம் இணைப்பு வழங்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது . அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார இணைப்பு வழங்கி சாதித்து காட்டியுள்ளார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

11:47 (IST) 16 Apr 2022
ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை

ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்படும் என குஜராத்தில் 108 அடி உயர் அனுமன் சிலையை திறந்து வைத்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தெரிவித்தார்.

11:37 (IST) 16 Apr 2022
வைகையாற்று நெரிசலில் சிக்கி 2 பேர் பலி – தலா ரூ10 லட்சம் நிதியுதவி

மதுரை வைகையாற்று நெரிசலில் சிக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ10 லட்சம் வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த 11 பேருக்கு தலா ரூ1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

11:29 (IST) 16 Apr 2022
ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.

11:29 (IST) 16 Apr 2022
ரூ. 801 கோடி செலவில் 1 லட்சம் மின் இணைப்பு!

விவசாயிகளுக்கு ரூ. 801 கோடி செலவில் 1 லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழ்நாடு மின்தடை இல்லாத மாநிலமாக திகழ்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி!

11:29 (IST) 16 Apr 2022
விவசாயிகள் உடன் முதல்வர் கலந்துரையாடல்!

சென்னை, தலைமை செயலகத்தில், கடந்த ஓராண்டில் விவசாய மின் இணைப்பு பெற்ற 1 லட்சம் விவசாயிகளுடன் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கண்ணபிள்ளை என்ற 1 லட்சமாவது விவசாயிக்கு மின் இணைப்பு ஆணையை முதல்வர் வழங்கினார்.

10:58 (IST) 16 Apr 2022
தலைநகர் கீவில் 900 உடல்கள் மீட்பு!

உக்ரைன் புக்ஸா நகரில் ஏற்கெனவே 500 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய நிலையில், அங்கிருந்து சுமார் 900 உடல்கள் மீட்கபட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

10:58 (IST) 16 Apr 2022
சென்னையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்!

சென்னை தீவுத்திடலில், 14 ஆண்டுகளுக்குப் பின் திருமலை – திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இன்று ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது; 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!

10:57 (IST) 16 Apr 2022
3ஆம் உலகப்போர் தொடங்கியது!

உக்ரைன் போரில் ரஷ்யாவின் மொஸ்கவா போர்கப்பல் தீப்பிடித்து மூழ்கியதை அடுத்து 3ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

10:46 (IST) 16 Apr 2022
300 யூனிட் இலவச மின்சாரம்!

பஞ்சாபில் ஜூலை 1ஆம் தேதி முதல் அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

10:46 (IST) 16 Apr 2022
மதுரை சித்திரை திருவிழா.. உதவி எண் அறிவிப்பு!

மதுரை சித்திரை திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்து தகவல் அறிய மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை 94980 42434 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

09:40 (IST) 16 Apr 2022
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. 2 பேர் உயிரிழப்பு!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது, ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் திரண்டதால் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் மயக்கமடைந்த நிலையில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

08:35 (IST) 16 Apr 2022
108 அடி அனுமன் சிலை!

குஜராத் மாநிலம், மோர்பியில் 108 அடி அனுமன் சிலையை காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் .

08:34 (IST) 16 Apr 2022
சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி.. தீபக் சஹார் ட்வீட்!

”காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை; தொடர்ந்து ஆதரவு அளித்த சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி” என நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சென்னை அணி வீரர் தீபக் சஹார் ட்வீட்!

08:32 (IST) 16 Apr 2022
கொரோனா தொற்றை கண்டறியும் புதிய கருவி!

மூச்சு மாதிரியை வைத்து 3 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவிக்கு, அவசர பயன்பாட்டுக்காக அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கருவி மூலம் நாளொன்றுக்கு 160 பேருக்கு பரிசோசதனை செய்யலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.

08:32 (IST) 16 Apr 2022
100% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி!

ஆந்திராவில் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் அனைவருக்கும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், காஷ்மீரில் 83.6 சதவீதம், இமாச்சலபிரதேசத்தில், 80.8 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

08:31 (IST) 16 Apr 2022
தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21ம் தேதி வரை, சொந்த ஊருக்கு சென்ற மக்கள், நகரங்களுக்கு திரும்ப ஏதுவாக கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.