அசாமின் பல பகுதிகளில் வீசிய கடுமையான புயல் : 14 பேர் பலி – 12,000 வீடுகள் சேதம்

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அசாமின் பல பகுதிகளில் வீசிய கடுமையான புயல் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர், 12 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.

அசாமிய புத்தாண்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான புயல் வீசியது, இதனால் அசாமின் 12 மாவட்டங்களில் 21,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்  (ASDMA) வெளியிட்ட தகவல்களின்படி, “வெள்ளிக்கிழமையன்று திப்ருகார் மாவட்டத்தில் 4 பேர், பர்பேட்டாவில் 3 பேர் மற்றும் கோல்பராவில் ஒருவர் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமையன்று, பக்சா மாவட்டத்தில் 2 பேரும், திப்ருகாரில் ஒருவரும், டின்சுகியாவில் 3 பேரும் புயலால் உயிரிழந்தனர். மேலும், வெள்ளிக்கிழமையன்று புயல் காரணமாக மொத்தம் 7,344 வீடுகளும், சனிக்கிழமையன்று மொத்தம்  4,768 வீடுகளும் சேதமடைந்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Assam: Storm claims 14 lives, damages over 12,000 houses in 2 days | Latest  News India - Hindustan Times

அசாம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இம்மாத தொடக்கத்தில் இருந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சில பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வரும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.