ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியர் கழுத்தில் டை அணிய தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்கள் கழுத்துப்பட்டை அணிய தேவையில்லை என அந்நாட்டு கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், மாணவிகளின் சீருடை உள்ளிட்டவை குறித்த திட்டம் முழுமையாக தயாரிக்கப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.