இதில் ஒன்றை தேநீருடன் சேர்த்து சாப்பிடுங்கள்.. நன்மைகள் ஏராளம்!


தேநீருடன் மாலைப்பொழுதில் எந்தெந்த சிற்றுண்டியை சேர்த்து சாப்பிட்டால் நன்மை கிடைக்கும் என்பது குறித்து இங்கு காண்போம்.

நாம் எந்த வகையான ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை தினசரி தேநீருடன் இணைக்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. மதிய உணவுக்கும், இரவு உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் பசி மிகவும் அதிகமாக இருக்கும்.

இந்த சமயத்தில் எந்தெந்த ஆரோக்கியமான தின்பண்டங்களை தேநீருடன் சேர்த்து சாப்பிடுவது என்பது குறித்து இங்கு காண்போம். 

மக்கானா

தேநீர் அல்லது காபிக்கு சரியான துணையாக இருக்கும் ஆரோக்கியமான உணவு மக்கானா. இதில் கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம். இது ஒரு எளிய ஆனால் சுவையான சிற்றுண்டியாகும்.

ஒரு கடாயில் ½ டீஸ்பூன் நெய்யை சூடாக்கிக் கொள்ள வேண்டும். அதில் 1 கப் மக்கானாவை சேர்க்கவும்.

பின்னர் நடுத்தர வெப்பத்தில் பொன்னிறமாக வரும் வரை அவற்றை வறுக்க வேண்டும். மக்கானாக்கள் மிருதுவானதும், அவை பரிமாற தயாராக இருக்கும். பின்பு அதனுடன் சிறிது உப்பு, கருப்பு மிளகு தூள், சாட் மசாலா தூவி சாப்பிடலாம்.

பாப்கார்ன்

சோள கர்னல்களை வாங்கி அவற்றை வீட்டில் பாப்கார்ன் செய்ய பயன்படுத்தலாம். குறைந்த வெண்ணெயில் பாப்கார்னைச் செய்யலாம். அல்லது அதற்கு பதிலாக ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். பின் சிறிது மிளகுத்தூள் சேர்த்து தேநீர் நேர சிற்றுண்டிக்கு சுவையாக சாப்பிடலாம். சுமார் 8 கிராம் அளவுள்ள 1 கப் பாப்கார்னில் 32 கலோரிகள் மட்டுமே உள்ளது.

வறுத்த சுண்டல் 

வறுத்த சுண்டல் என்பது பெரும்பாலான உணவு நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு சிற்றுண்டியாகும். இது புரதம், நார்ச்சத்து மற்றும் பூஜ்ஜிய கொலஸ்ட்ரால் கொண்ட உணவாகும். சுமார் ½ கடோரி வறுத்த சுண்டல் 125 கலோரிகளை உடலுக்கு வழங்கும்.

பேல் பூரி

வறுத்த பொறி, வறுத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு, சாட் மசாலா, உப்பு மற்றும் புதினா சட்னி ஆகியவற்றை கலந்து சிற்றுண்டிக்கு சுவையான பேல் பூரி தயார் செய்யலாம்.

1 கப் பொறியில் 30 கலோரிகள் மட்டுமே உள்ளது. பொறி எண்ணெய் இல்லாதது என்பதால், சிற்றுண்டி செய்வதற்கு இது மிகவும் ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். எனவே தேநீருடன் இதனை சேர்த்து உட்கொள்ளலாம்.

ராகி சிப்ஸ்

வறுத்த சிப்ஸ்களுக்குப் பதிலாக, வேகவைத்த ராகி சிப்ஸை உட்கொள்ளலாம். இது மிகவும் சிறந்த ஆரோக்கியமான மாற்றாகும். ராகி புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் இதில் ஏராளம். நீங்கள் கொண்டைக்கடலை அல்லது ஓட்ஸைப் பயன்படுத்தி வறுத்த அல்லது சுட்ட சிப்ஸை தயாரிக்க முயற்சி செய்யலாம். இத்தனையும் தேநீருடன் சேர்த்து உட்கொள்ளலாம்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.