மாநாடு
படத்தின் மூலம் மறுபிறவி எடுத்துள்ளார் நடிகர் சிம்பு. ஒரு காலகட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் படத்திற்கு படம் ஹிட் கொடுத்த சிம்பு பல சறுக்கல்களை சந்தித்தார். அவரை பிடிக்காதவர்கள் கூட பாவம் சிம்பு என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு பிரச்சனைகள் வந்தன.
மூன்று வருடங்களுக்கு மேலாக ஒரு ஹீரோவிற்கு படங்கள் வெளியாகவில்லை என்றால் ரசிகர்கள் அவரை மறக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் நடிகர் சிம்பு விஷயத்தில் அப்படியில்லை. ரசிகர்களின் பேராதரவினால் அவர் மீண்டும் தற்போது பழைய சிம்புவாக கலக்கிக்கொண்டிருக்கின்றார்.
விஜய் படத்தைப்பற்றி பேசவே பயமா இருக்கு : வம்சி
மாநாடு வெற்றி, டாக்டர் பட்டம், பல படங்கள், விளம்பரபடங்கள்,
பிக் பாஸ்
நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி வருகிறார் சிம்பு. இந்நிலையில் சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான்
இசையில் உருவான இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் கதை இணையத்தில் வெளியாகிவுள்ளது. அதாவது கிராமத்து இளைஞனான சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்து வருகின்றார்.
சிலம்பரசன்
ஆனால் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. தன் அம்மா மற்றும் தங்கை கஷ்டங்களை போக்க வேலைக்காக மும்பை செல்கிறார் சிம்பு. அப்போது எதிர்பாராத விதமான சில பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கின்றார். அதையடுத்து அதிலிருந்து சிம்பு எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் மீதி கதை.
வெந்து தணிந்தது காடு
இத்தகவல் தற்போது இணையத்தில் பரவிவருகிறது. இருப்பினும் இப்படம் வெளியான பிறகுதான் உண்மை கதை என்ன என்பது தெரியவரும். மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிம்பு – அனிருத் கூட்டணி; ரசிகர்கள் happy!