ஆசியாவைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்தியர்கள் குறித்து அவதூறாக பேசிய அமெரிக்க பேராசிரியைக்கு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் பென்ஸில்வேனியா பல்கலையைச் சேர்ந்த பேராசிரியை ஆமி வாக்ஸ், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கறுப்பர்கள் மற்றும் அமெரிக்காவைச் சேராத மற்ற நாட்டினர், அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளதாக கூறி வருகின்றனர். ஆசியாவைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்தியர்களுக்கு இந்த மனப்போக்கு உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பிராமணர்களுக்கு, மற்றவர்களைவிட தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் உள்ளது. பல்வேறு துறைகளில், இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் சிறப்பாக செயல்படுவதால், அவர்களுக்கு ஆத்திரம். இதை அவமானமாக கருதுகின்றனர். அதனாலேயே அமெரிக்கர்களை மட்டம் தட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அவருடைய இந்த பேச்சுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பார்லிமென்ட் எம்.பி.,யான இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர், ஆமி வாக்சின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-நமது நிருபர்-
Advertisement