ரஷ்யா – உக்ரைன் போர் சுமார் 2 மாத காலமாக தொடர்ந்து வரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போரிஸ் ஜான்சன் சென்ற வாரம் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்த பயணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. அவர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டு பிறகு, அவர் முதல் முறையாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த நிலையில், வரும் 21ம் தேதி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக அவரது இந்திய பயணம் இரண்டு முறை ரத்தாகியுள்ளது.
இந்தியா வருகை தரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ள தோடு, இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்கள், வர்த்தக துறையினர் ஆகியோரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 21ம் தேதி குஜராத்திற்கு செல்வர் எனவும், 22ம் தேதி பிரதமர் மோடியுடம் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்துவார் எனவும் ANI செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | உக்ரைக்கு $800 மில்லியன் இராணுவ உதவி; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு
ரஷ்யா உக்ரைன் போரில், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் பொருள் உதவிகளும் அளித்து வரும் நிலையில், ஜான்சனின் இந்திய பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக, இந்தியா ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இதுவரை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தியா இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வை எட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சென்ற வாரம் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார். கீவ் நகரில் அதிபர் செலன்ஸ்கியை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட அவர், கீவ் நகர வீதிகளை நடந்தே பார்வையிட்டதோடு மக்களுடனும் கலந்துரையாடினார்.
மேலும் படிக்க | உக்ரைனுக்கு சென்ற பிரிட்டன் பிரதமர்…அதிபர் செலன்ஸ்கியுடன் ஆலோசனை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR