புதுடெல்லி:
போர் நடைபெறும் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர். நாடு முழுவதிலும் உள்ள சுமார் 300 பேர் இதில் பங்கேற்றனர்.
உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்ட மருத்துவ மாணவர்களை போலந்து, ஹங்கேரி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள கல்லூரிகளில் சேர்க்க மத்திய அரசு திட்டமிடுவதாகவும், அங்கு இந்திய தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் போலவே கட்டணம் மிக அதிகமாக இருக்கும் என்றும் பெற்றோர் சங்கத்தினர் கூறுகின்றனர்.
உக்ரைனில் இருந்து அவர்கள் உயிரைக் காப்பாற்றி அழைத்து வந்ததுபோன்று, அவர்களின் வாழ்க்கையை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கூறுகின்றனர்