உக்ரைனில் விடுமுறை கொண்டாட சென்ற கனேடியர் வெளியிட்ட முக்கிய தகவல்


உக்ரைனில் விடுமுறை கொண்டாட சென்ற கனேடியர், ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் இராணுவத்துடன் இணைந்து போரிட முடிவு செய்த பின்னணியை அவரே வெளிப்படுத்தியுள்ளார்.

உக்ரைனில் விடுமுறையை கழிக்க சென்றவர் கனேடியரான Igor Volzhanin. ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்ததன் அடுத்த நாள், பிப்ரவரி 25ம் திகதி அவர் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில், பயணம் ரத்தாகியுள்ளது.

அடுத்த சில நாட்களில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உலகெங்கிலும் உள்ள மக்களை ரஷ்யாவை எதிர்த்துப் போராட உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இராணுவத்தில் அனுபவம் ஏதுமற்ற Igor Volzhanin உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று வெளிநாட்டு படைகளுக்கான பிரிவில் இணைந்துள்ளார்.
52 நாடுகளைச் சேர்ந்த 20,000 பேரில் தன்னார்வத்துடன் போராட முன்வந்தவர்களில் தாம் இரண்டாவது நபர் என்று Igor Volzhanin தெரிவித்துள்ளார்.

அப்போதைய சூழலில் அந்த முடிவே சரியானது என தாம் கருதியதாக கூறும் அவர், உக்ரைனில் பிறந்ததாக எண்ணியே பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஆபத்தான போருக்கு செல்வதாகவும், எப்போது வேண்டுமானாலும் மரணம் ஏற்படலாம் எனவும், மரணம் உறுதி என்பதை புரிந்துகொண்டு களத்தில் இறங்க வேண்டும் என சக வீரர்கள் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராக சுமார் 1500 கனேடிய வீரர்கள் உக்ரைனில் போரிட பதிவு செய்துள்ளதாக கூறும் Igor Volzhanin, ஆனால் பெரும்பாலானவர்களை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிநாட்டு வீரர்களுக்கான துருப்பில் சேர்பவர்கள் இராணுவச் சட்டம் நீக்கப்படும் வரை உக்ரைனில் தங்கியிருப்போம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
ஆனால் சிறப்பு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, பால்கன் போர்களில் பணியாற்றிய வீரர்கள் மற்றும் தென் அமெரிக்காவில் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக போராடியவர்கள் என முன்னாள் வீரர்களுக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் மரியாதை அளிப்பதாக Igor Volzhanin தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.