ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பரபரப்பான சாலையில் உணவு டெலிவரி நிறுவன ஊழியரை பெண் ஒருவர் தன் காலில் உள்ள செருப்பைக் கழட்டி அடிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சுற்றி நிற்கும் பொதுமக்கள் நிறுத்தச் சொன்னாலும், அந்த பெண் தொடர்ந்து அந்த நபரை அடித்துள்ளார். ஒரு கட்டத்தில், அந்த பெண் அவரை எட்டி உதைத்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், ‘எதிர் திசையில் வந்த உணவு டெலிவரி நிறுவன ஊழியரின் பைக், எனது இருசக்கர வாகனத்தில் மோதியது. அதனால் அவரை செருப்பால் தாக்கினேன்’ என்றார். ஆனால் அந்த பெண் அருகில் வரும் வாகனங்களை கூட கவனிக்காமல் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக அப்பகுதியில் இருந்தவர்கள் கூறினர்.உணவு டெலிவரி நிறுவன ஊழியர் தவறான பாதையில் நுழைந்தது தவறு என்பதை ஏற்றுக்கொண்ட பலர், அந்த பெண் சூழ்நிலையை கையாண்ட விதத்தை பலரும் சமூக ஊடக தளத்தில் கண்டித்து வருகின்றனர். அதில் ஒருவர், ‘உணவு டெலிவரி ெசய்யும் நபர்கள், குளிர்காலம், கோடை, மழை, புயல் போன்ற எல்லா காலநிலையிலும் நமக்கு உணவளிக்கின்றனர். அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சப்ளை செய்கின்றனர். ஆனால் இங்கே இந்தப் ெபண் செய்த காரியம் அவமதிப்பதாக உள்ளது. உண்மையில் இந்த பெண் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.