BLUEKRAFT DIGITAL FOUNDATION என்ற அமைப்பு அம்பேத்கரும், மோடியும் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு இசைஞானி
இளையராஜா
முன்னுரை எழுதியிருந்தார், அதில் பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்ட இளையராஜா, அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பார்த்து பெருமைப்பட்டிருப்பார் என புகழ்ந்திருந்தார்.
மேலும்
பிரதமர் மோடி
கொண்டு வந்த திட்டங்களையும் பட்டியலிட்டிருந்தார் இளையராஜா. இளையராஜா அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தனது கருத்தை திரும்பப் பெற போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார் இளையராஜா.
Aishwarya: சொன்னா கேளு பாப்பா… அடம்பிடிக்காத.. ஐஸ்வர்யாவால் காண்டாகும் ரஜினி ரசிகர்கள்!
இதுகுறித்து அவரது சகோதரரான
கங்கை அமரன்
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, இளையராஜாவிடம் இந்த விஷயம் குறித்து நான் பேசினேன். அப்போது அவர், `நான் எழுதிய கருத்து தவறு என்று மன்னிப்பு கேட்க வேண்டுமா? மற்றவர்களை போன்று தான் நானும் என்னுடைய கருத்தைக் கூறினேன். அதற்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும், நான் ஏற்றுக்கொள்கிறேன். என் எண்ணத்தில் மோடி எப்படி இருக்கிறாரோ அதுதான் என் பேச்சில் வந்துள்ளது.
லெட்டர் எழுதி வைத்துவிட்டு ஓடிப்போன நடிகர் விஜய்… அம்பலப்படுத்திய அப்பா!
பதவிக்காக நான் மோடியை புகழ்ந்து பேசவில்லை. எனக்கு அப்படியான எந்தப் பதவியும் தேவையில்லை. நான் பாஜகவிலும் இல்லை. தனிப்பட்ட முறையில் மோடியை எனக்கு பிடிக்கும். நான் பல பாட்டுக்கு இசை அமைக்கிறேன். `சில பாட்டு நல்லா இருக்கு என்பார்கள். சில பாடல் நல்லா இல்லை’ என்பார்கள். அதைப் போன்றுதான் எனது இந்தக் கருத்தும்.
எனக்கு கருத்து சொல்ல சுதந்திரம் உள்ளது. மோடியை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதை நான் கூறியுள்ளேன். ஒரு புத்தகத்தை கொடுத்து என்னிடம் முன்னுரை எழுத சொன்னார்கள். நான் ரெண்டு பேரையும் அலசி ஆராய்ந்து என்னுடைய எண்ணத்தை எழுதினேன். இதற்காக நான் எழுதிய கருத்து தவறு என்று மன்னிப்பு கேட்க முடியுமா? நான் எழுதியதில் ஏதாவது தவறு இருக்கிறதா?
என்னது தலைவர் 169 ட்ராப்பா? தீயாய் பரவும் தகவல்!
எனக்கு மோடியையும் பிடிக்கும்; அம்பேத்கரையும் பிடிக்கும். அதனால் இரண்டு பேரையும் ஒப்பிட்டு எனது கருத்தைத் தெரிவித்தேன். என் பார்வையில் அம்பேத்கர் சொன்னதையெல்லாம் மோடி செய்து வருகிறார்… என்று இளையராஜா கூறியதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
விஜய் 66; டைரக்டர் சொன்ன நல்ல செய்தி; குஷியில் விஜய் ரசிகர்கள்!