என் இஷ்ட தெய்வம் இதுதான்… சௌமியா அன்புமணி பூஜை அறை எப்படி இருக்கு தெரியுமா?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளராகவும் பசுமையத் தாயகம் என்ற அமைப்பின் தலைவராகவும் டாக்டர் சௌமியா அன்புமணி செயல்பட்டு வருகிறார். பசுமைத் தாயகம் என்ற இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.

பாமக இளைஞரணி பொதுச் செயலாளர் அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணி சக்தி விகடனுக்கு ஒரு வீடியோ நேர்காணல் அளித்துள்ளார். அதில், தனது பூஜை அறையை அறிமுகப்படுத்தியுள்ள சௌமியா அன்புமணி, தனது இஷ்ட தெய்வம் ஆண்டாள் பற்றியும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் கிளி பற்றியும் தனது நம்பிக்கைகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

சக்தி விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், சௌமியா அன்புமணி தந்து பூஜை அறையை அறிமுகப்படுத்துகிறார். பூஜை அறையில், திருப்பதி வெங்கடாஜலபதி, ஐயப்பன், விநாயகர், முருகன் உள்ளிட்ட சாமிகளின் படங்கள் இருக்கின்றன. தனது பூஜை அறையில், தினமும் 10 நிமிடங்களாவது அமர்ந்து ஏதாவது ஸ்லோகம் சொல்லி அல்லது சாமி பாடல்களைப் பாடி சாமி கும்பிடுவேன் என்று சௌமியா அன்புமணி கூறுகிறார்.

இந்த பூஜை அறையில் உள்ள சாமி சிலைகளில் ஒரு சில சிலைகள் சௌமியா திருமணம் ஆகி வரும்போது கொடுத்தவை என்று தெரிவித்துள்ளார்.

பூஜை அறையில் நடு நாயகமாக இருக்கும் வெங்கடாஜலபதி படம் தஞ்சாவூர் பெயிண்டிங்கால் ஆனது என்பதைக் கூறும் சௌமியா, அவரும் அவருடைய மாமியாரும் காரைக்குடி போயிருந்தபோது, தைலாபுரம் வீடு கட்டும்போது, தூண் உள்ளிட்ட பொருட்கள் வாங்கினார்கள். அப்போது இந்த பெருமாள் படத்தை வாங்கியதாக சௌமியா கூறினார்.

ஆண்டாள் என்றால் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறும் சௌமியா அன்புமணி, தன்னுடைய திருமணத்தின்போது, அவருடைய அம்மாவும் அவருடை தாய்மாமா மனைவியும் பார்த்தசாரதி கோயிலுக்கு அழைத்துச் சென்று ஆண்டாளுக்கு அர்ச்சனை செய்து எங்க வீட்டு பெண் சௌமியாவுக்கு நல்ல கணவனாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். அதே மாதிரி அன்புமணி என்ற நல்ல கணவர் கிடைத்தார் என்று சௌமியா மகிழ்ச்சியுடன் கூறுகிறார். அதே மாதிரி தனக்கு 3 பெண்கள் என்பதால் அதே மாதிரி தானும் வேண்டிக்கொள்ளத் தொடங்கியதாக சௌமியா கூறினார்.
தனது இஷ்ட தெய்வம் ஆண்டாள் குறித்து சௌமியா அன்புமணி கூறியிருப்பதாவது: ஒவ்வொரு முறையும் வேண்டிக்கொள்ளும்போதும் அது எப்படி என்றே தெரியவில்லை, ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து ஒரு மேஜிக் மாதிரி கிளி வரும். முதலில் ஒரு கிளி வந்தது அதை வைத்து வேண்டிகொண்டிருந்தேன். எனது பெரிய பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சு. நல்ல மாப்பிள்ளை. அதே போல, இப்ப ரெண்டாவது பொண்ணுக்காக ஒரு கிளி கொடுத்தார்கள். அதுவும், அதே மாதிரி வேண்டினேன். ரெண்டாவது பொண்ணுக்கு திருமணம் ஆச்சு. இப்ப 3வது கிளியை தேவி அத்தை கொடுத்தனுப்பினார்கள். அவர்கள் இறந்துவிட்டார்கள். அவர்கள் கொடுத்த கிளியை 3வது பொண்ணுக்காக வைத்து வேண்டிக்கொண்டிருக்கிறேன். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கிளிக்கு அந்த மாதிரி செண்டிமெண்ட்டல் வேல்யூ இருக்கிறது. ஏன்னா, என் கல்யாணத்துக்கும் கிளி வந்தது. இப்போது என்னுடை பொண்ணுங்க கல்யாணத்துக்கும் முன்னாடியே வந்தது. அது பெரிய கொடுப்பினை என்று தனது இஷ்ட தெய்வம் ஆண்டாள் பற்றி சௌமியா பகிர்ந்துகொண்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.