உங்களில் எத்தனை பேருக்கு உங்களது வங்கி விவரங்கள் முழுமையாக தெரியும். குறிப்பாக உங்களின் டெபிட் கார்டு விவரங்கள் முழுமையாக தெரியும். ஒரு வேளை திடீரென தொலைந்துவிட்டால் அதனை எப்படி பிளாக் செய்வது? எப்படி புதியதாக விண்ணபிப்பது? என்ற விவரங்கள் தெரியுமா?
தெரியாது எனில் நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கானதே?
இந்தியாவுக்கு கிரேட் சான்ஸ்.. ரஷ்யாவின் அணுகலுக்கு பலன் கிடைக்குமா?
பிளாக் செய்யுங்கள்
நீங்கள் உங்களது ஏடிஎம் கார்டினை தொலைத்து விட்டால், பதற்றப்படாமல் உடனே பிளாக் செய்யுங்கள். இன்றைய காலக்கட்டத்தில் உங்களது கார்டினை எளிதில் பிளாக் செய்து கொள்ளலாம். அதற்காக பல வழிமுறைகளும் உள்ளன. அதேபோல தொலைந்து போன ஏடிஎம்-களையும் திரும்ப பெறவும் பல வழிகள் உள்ளன. ஆக அதனையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
எளிதில் பிளாக் செய்யலாம்
வாடிக்கையாளர்கள் உடனே தங்களது வங்கிக் கிளையை அணுகி தெரிவிக்கலாம். அப்படி இல்லாவிட்டாலும் எஸ்பிஐயின் யோனோ ஆப் வழியாகவும், ஆன்லைன், ஆஃப்லைன் வழியாகவும், மொபைல் எஸ் எம் எஸ், போன் கால் வழியாகவும் பிளாக் செய்யலாம். அந்த வகையில் நாம் இன்று எஸ்பிஐ-யில் எப்படி பிளாக் செய்வது? எப்படி புதிய கார்டினை பெறுவது என்பதை பார்க்கலாம்.
எஸ்பிஐ – SMS மூலம் எப்படி?
மொபைல் எஸ்எம்எஸ் மூலமும் தொலைந்துபோன ஏடிஎம் கார்டினை பிளாக் செய்ய, BLOCK XXXX என டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பலாம். அதாவது BLOCK (space)XXXX என டைப் செய்து அனுப்பவும். அதில் XXXX என்ற இடத்தில் உங்களது டெபிட் கார்டின் கடைசி 4 இலக்க நம்பரை கொடுக்க வேண்டும். இந்த எஸ் எம் எஸினை கட்டாயம் உங்களது வங்கிக் கணக்கில் இணைத்துள்ள பதிவு மொபைல் எண்ணில் இருந்து அனுப்ப வேண்டும். உங்களது கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டால், இதற்காக உறுதிபடுத்த உங்களுக்கு எஸ் எம் எஸ் வரும்.
எஸ்பிஐ – போன் மூலம் எப்படி?
எஸ்பிஐ-யின் ஹெல்ப்லைன் நம்பர் 24 மணி நேரமும் செயலில் இருக்கும். ஆக வாடிக்கையாளார்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த டோல் ப்ரீ எண்ணுக்கு கால் செய்து உங்களது தொலைந்து போன டெபிட் கார்டினை பிளாக் செய்யலாம். இதற்காக நீங்கள் 1800 11 2211 என்ற எண்ணுக்கும், இதே 1800 425 3800 என்ற எண்ணுக்கும் கால் செய்யலாம். இது தவிர 0802659 9990 என்ற எண்ணுக்கும் கால் செய்து பிளாக் செய்யலாம்.
இதே 1800 1234 அல்லது 1800 2100 என்ற எண்ணுக்கு கால் செய்து எப்படி கார்டினை பிளாக் செய்வது மற்றும் புதியதை எப்படி பெறுவது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
எஸ்பிஐ – யோனோ ஆப் மூலம்?
எஸ்பிஐ – வாடிக்கையாளார்கள் தங்களது யோனோ ஆப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதில் service request என்ற ஆப்சனில் பிளாக் ஏடிஎம்/டெபிட் கார்டு என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு உங்களது இணைய வங்கியின் பாஸ்வேர்டினை கொடுத்து தொடரவும்.
இதன் பிறகு உங்களது அட்டையுடன் லிங்கில் உள்ள வங்கிக் கணக்கினை கிளிக் செய்யவும்.
அதில் உங்களது கார்டு எண் மற்றும் எதற்காக கார்டினை பிளாக் செய்கிறீர்கள் என கூறவும்.
அதன் பிறகு உங்களது கார்டினை தற்காலிகமாக பிளாக் செய்ய வேண்டுமா? அல்லது நிரந்தரமாக பிளாக் செய்ய வேண்டுமா என்பதை கொடுக்கவும்.
எஸ்பிஐ – ஆன்லைனில் செய்வது எப்படி?
வாடிக்கையாளர்கள் https://onlinesbi.com/ என்ற இணையதளத்தில் சென்று உங்களது இணைய வங்கியினை லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு E-services என்ற ஆப்சனின் கீழ் ATM card services என்பதை கிளிக் செய்து, அதில் Block ATM என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு எந்த அக்கவுண்டுடைய ஏடிஎம் கார்டு என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பின்னர் பிளாக் என்பதை கிளிக் செய்து, எதற்காக பிளாக் செய்கிறீர்கள் என்பதையும் பதிவு செய்யவும்.
ஒரு முறைக்கு இருமுறை விவரங்களை சரிபார்த்து பின்னர் சப்மிட் கொடுக்கவும். இதனை உறுதிபடுத்த உங்களது ஓடிபி அல்லது profile பாஸ்வேர்டினை கொடுத்து confirm என்பதை கிளிக் செய்யவும்.
எஸ்பிஐ – புதிய ஏடிஎம் விண்ணப்பிப்பது எப்படி?
https://onlinesbi.com/ என்ற எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று இணைய வங்கியை லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதில் e- services என்பதன் கீழ், ஏடிஎம் கார்டு சேவைகள்’ என்பதை கிளிக் செய்யவும்.
அதில் request ஏடிஎம் / டெபிட் கார்டினை கிளிக் செய்யவும்.
வெரிபிகேஷனுக்காக SMS OTP அல்லது profile password-னை கிளிக் செய்யவும்.
இதில் SMS OTP அல்லது profile password பதிவு செய்து கன்பார்ம் என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலும் அட்டை வழங்கப்படவேண்டிய வங்கிக் கணக்கினையும் தேர்வு செய்யவும்.
நீங்கள் அட்டையில் அச்சிட விரும்பும் பெயரை பதிவு செய்து, அட்டை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில் விவரங்களைச் சரிபார்த்து, சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் புதிய எஸ்பிஐ ஏடிஎம் / டெபிட் கார்டை பதிவு செய்யப்பட்ட முகவரியில் 7 – 8 வேலை நாட்களில் பெற முடிவும்.
யோனோ வழியாக விண்ணப்பிப்பது எப்படி?
எஸ்பிஐயின் யோனோ ஆப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு service request என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு ‘புதிய / மாற்றுக் கோரிக்கை (Request NEW/Replacement) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன் பிறகு உங்களது கணக்கை தேர்ந்தெடுத்து, உங்கள் அட்டையில் நீங்கள் விரும்பும் பெயரை டைப் செய்து, பின்னர் நீங்கள் விரும்பும் அட்டை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
புதிய கார்டினை அனுப்ப ஒரு முகவரியைத் தேர்ந்தெடுத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு. OTP ஐ உள்ளிட்டு தொடரவும்.
மொபைல் ஆப்பில் எப்படி?
உங்களது மொபைலில் உள்ள எஸ்பிஐ கார்டு மொபைல் ஆப்பினை (SBIcard mobile app) லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதில் menu பாரினை கிளிக் செய்து, அதன் பிறகு service request என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு Request NEW/Replacement என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.உங்களது கார்டு நம்பரைகொடுத்து சப்மிட் செய்து கொள்ளுங்கள்.
புதிய கார்டுகளுக்கு கட்டணம்?
ஏதேனும் ஒரு காரணத்தினால் நீங்கள் NEW/Replacement என்பதை அப்ளை செய்கிறீர்கள் எனில், அதற்காக Replacement கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இதன் பிறகு உங்களது கார்டு 7 வேலை நாட்களில், நீங்கள் கொடுத்த முகவரிக்கு அனுப்பப்படும். எனினும் உங்களது முகவரிக்கு தகுந்த வாறு இந்த காலாவகாசம் வேறுபடலாம்.
how can i block my sbi atm card? how to get new atm card?
how can i block my sbi atm card? how to get new atm card?/ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டதா.. கட்டாயம் இதை செய்யுங்க.. !