ஏப். 21ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக வரும் 21 ஆம் தேதி இந்தியா வர உள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் இரு முறை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த இரு முறையும் கொரோனா பரவல் காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. அதே போல், இந்த ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்தார். ஆனால், பிரிட்டன் நாட்டில் பரவிய கொரோனா காரணமாக அவரது இந்தியப் பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக வரும் 21 ஆம் தேதி பிரிட்டன் பிரதமர்
போரிஸ் ஜான்சன்
இந்தியா வர உள்ளார். பயணத்தின் முதல் நாளில், அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்திற்கு செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

மகனுக்கு முதல்வர் பதவி: அடுத்து பிரதமர் தான்..!

பயணத்தின் இரண்டாவது நாளான 22 ஆம் தேதி, தலைநகர் டெல்லியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இரண்டு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.