ஐபிஎல் : தினேஷ் கார்த்திக் ,மேக்ஸ்வெல் அதிரடி : பெங்களூரு அணி 189 ரன்கள் குவிப்பு..!

மும்பை,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.இன்று நடைபெறும்  27 வது லீக்  ஆட்டத்தில் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதுகின்றன .
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி  பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக டு பிளெஸ்சிஸ் ,அனுஜ் ராவத் களமிறங்கினர் . தொடக்கத்தில் இருவரும் ஆட்டமிழந்தனர் ,ராவத் ரன் எடுக்காமலும் ,டு பிளெஸ்சிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த விராட் கோலி 12 ரன்களில் (ரன் அவுட் )  விக்கெட்டை பறிகொடுத்தார் .
40 ரன்களில் 3 விக்கெட் இழந்து பெங்களூரு அணு தடுமாறியது , விக்கெட்டுக்களை இழந்தாலும் மறுபுறம் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார் ,டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஓவரில் 2 சிக்ஸர் ,2 பவுண்டரி பறக்கவிட்டார் . 
சிறப்பாக விளையாடிய அவர் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார் .தொடர்ந்து விளையாடிய அவர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 55 ரன்களில் ஆட்டமிழந்தார் .
பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார்  முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரில்  4 பவுண்டரி ,2 சிக்ஸர் , பறக்க விட்டார் . .
மறுபுறம் ஷாபாஸ் அகமது   தனது  பங்குக்கு அதிரடியில் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார் 
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது .தினேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்,
இதனை தொடர்ந்து 190 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி   விளையாடுகிறது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.