கலிஃபோர்னியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நபா பள்ளத்தாக்கு அருகே பெர்ரிஸ்ஸா என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 4.7 மீட்டருக்கு மேல் உயரும்போது ஏரியில் உள்ள 72 அடி விட்டமுள்ள பிரம்மாண்டமான துளையின் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும். தற்போது ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த துளை மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும் படிக்க | அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதி!
The Glory Hole of Lake Berryessa. It is a drainage pipe to prevent flooding. pic.twitter.com/IGhraj9Qt8
— Science & Nature Zone (@Iearn_something) April 13, 2022
இத்துளையின் மூலம் வினாடிக்கு 1,360 கன மீட்டர் தண்ணீர் வெளியேற்றப்படும். இந்த பிரம்மாண்ட துளையின் வழியே நீர் வெளியேறும் போது சுழல் உருவாவதால் இந்த துளை ‘நரகத்துக்கான வழி’ என அழைக்கப்படுகிறது. நீர்மட்டம் அதிகரிப்பதனால் அணைக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, குறைந்த நேரத்தில் அதிக நீரை வெளியேற்றும் வகையில் இத்துளை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1997-ம் ஆண்டு சுழலில் சிக்கி ஒரு பெண் பலியானதைத் தொடர்ந்து, இத்துளைக்கு அருகே நீச்சல் அல்லது படகு சவாரி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்காவில் பெய்த கனமழையினால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, உபரி நீரை வெளியேற்ற இத்துளை திறக்கப்பட்டது. ஒவ்வொரு முறை துளை திறக்கப்படும்போதும் இதனைக் காண ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.
மேலும் படிக்க | சீறி பாய்ந்த காளையிடம் சிக்கிய மனிதர்! வைரலாகும் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!