கவனம்.. பேவரைட் பங்கில் முதலீடு குறைப்பு.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அதிரடி.. ஏன்!

பங்கு சந்தை முதலீட்டாளர்களில் பிரபலமான ஜுன்ஜுன்வாலா தரமான நிறுவனங்களில் முதலீடு செய்வதில் மிக பிரபலமானவர். இவர் ஒரு பங்கில் முதலீடு செய்தாலும், ஒரு பங்கில் இருந்து வெளியேறினாலும் அது கவனம் பெறும் பங்குகளில் ஒன்றாக இருக்கும்.

அந்த வகையில் தற்போது பிக் புல் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஒரு பங்கில் இருந்து தனது பங்கு விகிதத்தினை குறைத்துள்ளார்.

அது என்ன பங்கு அது? ஏன் குறைத்துள்ளார். ஏதேனும் காரணம் உண்டா? கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா.. ஹெச்டிஎஃப்சி வங்கியின் முடிவென்ன?

ஆப்டெக்கில் பங்கு விகிதம்

ஆப்டெக்கில் பங்கு விகிதம்

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலவின் போர்ட்போலியோகளில் சில மாற்றங்களை செய்துள்ளார். ஆப்டெக் நிறுவனத்தில் புரோமோட்டார்களாக இருக்கும் இருவரும், முந்தைய காலாண்டினை விட சற்று குறைத்துள்ளனர். ஆப்டெக் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் முந்தைய காலாண்டில் 12.34% பங்கு இருந்த நிலையில், மார்ச் காலாண்டில் 12.32% பங்குகள் அல்லது 5,09,4100 பங்குகள் மட்டுமே இருந்தது.

பங்கு குறைப்பு

பங்கு குறைப்பு

ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் 11.09% பங்குகள் இருந்த நிலையில் மார்ச் காலான்டில் 11.06% ஆக அல்லது 4,574,740 பங்குகளாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மொத்ததில் இருவரின் பங்களிப்பும் சேர்ந்து 0.05% குறைக்கப்பட்டுள்ளது. 23.43%ல் இருந்து 23.38% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஆப்டெக் பங்கு மதிப்பு
 

ஆப்டெக் பங்கு மதிப்பு

இந்த பங்கு முதலீட்டு தம்பதிகள் கடந்த டிசம்பர் 2015ல் இந்த பங்கினை அவர்களது போர்ட்போலியோவில் இணைத்துள்ளனர். மார்ச் 2022 நிலவரப்படி ரேர் ஈக்விட்டி மூலம் ஆப்டெக்கில் 20.42% பங்குகளை அல்லது 84,43,472 பங்குகளையும் வைத்துள்ளார். இதே டிரெண்ட்லைன் தரவின் படி, ராகேஷ் மற்றும் ரேகா வசம் இருக்கும் பங்கின் மதிப்பு 350 கோடி ரூபாயாகும்.

பங்கு நிலவரம் எப்படி?

பங்கு நிலவரம் எப்படி?

ஆப்டெக் நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 358.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய 52 வார உச்ச விலை 448 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 186.08 ரூபாயாகும்.

இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலை கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 358.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய 52 வார உச்ச விலை 447.95 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 186.60 ரூபாயாகும்.

சரிவு முகம்

சரிவு முகம்

2022ல் இதுவரையில் இப்பங்கின் விலையானது சற்று சரிவு முகமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் சற்று லாபகரமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இப்பங்கின் விலையானது 52 வாரஉச்சத்தினையும் எட்டியது குறிப்பிடத்தக்கது. இதன் வரலாற்று உச்சத்திற்கு பிறகு இப்பங்கின் விலையானது அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

ஓராண்டு நிலவரம்

ஓராண்டு நிலவரம்

நடப்பு ஆண்டில் இதுவரையில் இப்பங்கின் விலையானது 16% சரிவில் காணப்படுகின்றது. எனினும் ஒரு வருடத்தில் 77% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 13 அன்று இப்பங்கின் விலையானது 203 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 358 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.

லாபம்

லாபம்

கடந்த 2022ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ஆப்டெக் நிறுவனத்தின் நிகர லாபம் 23.89 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 9 மடங்கு அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 2.55 கோடி ரூபாயாக இருந்தது. இதே போல வருவாய் விகிதமும் முந்தைய ஆண்டின் 9 மாதங்களில் 59.51 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2022ம், நிதியாண்டில் 90.74 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rakesh jhunjhunwala and rekha jhunjhunwala reduced stakes in this firm during q4

Rakesh jhunjhunwala and rekha jhunjhunwala reduced stakes in this firm during q4/கவனம்.. பேவரைட் பங்கில் முதலீடு குறைப்பு.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அதிரடி.. ஏன்!

Story first published: Sunday, April 17, 2022, 14:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.