திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் இன்றைய (ஏப்ரல்) பதிப்பின் தனது தலையங்கத்தில் “ஐயா! நீங்கள் ஜனாதிபதி அல்ல” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திமுகவில் முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் தமிழகத்தில் விலக்கு பெற தேவையான நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறார்.
இதில் முதல் கட்டமாக தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலிறுத்தி சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை பெற்றுக்கொண்ட ஆளுனர் ஆர்.என்.ரவி அந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல், கடந்த பிப்ரவரி 8-ந் தேதி மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி ஆனுப்பினார்.
ஆளுநரின் இந்த செயலுக்கு ஆளும்கட்சி தரப்பில் கடுமையாகன எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இது தொடர்பாக திமுகவுக்கும் ஆளுனருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்த மசோதாவை ஆளுனர் மீண்டும் தமிழக அரசுக்கே திரும்பி அனுப்பியது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை.
இதனால் தமிழக அரசு பல இடங்களில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த வார தொடக்கத்தில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஆளுனர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் புறக்கணித்தன.இந்த நிகழ்வு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுனரின் நடவடிக்கைகள் அவர் தன்னை குடியரசுத் தலைவர் என்று நினைப்பது போல் தெரிகிறது என்று தமிழ் நாளிதழான முரசொலியின் தலையங்கக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
இதில் “தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவதுதான் ஆளுனரின் கடமை, ஆனால் அந்தக் கடமையைக் கூட அவர் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று கூறியுள்ள இந்த கட்டுறையில், நீட் விலக்கு மசோதா தமிழக சட்டசபையில் ஏன் நிறைவேற்றப்பட்டது என்பதற்கான பின்னணியையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நுழைவுத் தேர்வின் போது நடந்த போலிகளின் எண்ணிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நீட் நுழைவுத் தேர்வால் அதிகம் பாதிக்கப்படும் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் துயர நிலையைப் பற்றி கூறியுள்ள இந்த கட்டுரை, “நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதில் தொடர்ந்து காலதாமதம் செய்தால், தாமதமான நீதி மறுக்கப்படும் நீதி என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“