'சிங் இன் தி ரெய்ன்'.. 21 வருடங்களுக்கு பிறகு வடிவேலுடவுன் பிரபு தேவா… வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர்
வடிவேலு
. தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு வழங்கியதால் கடந்த 10 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

கடந்த ஆண்டு ரெட் கார்டு தடை நீக்கப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து படங்களில் புக்காகி வருகிறார் நடிகர் வடிவேலு. இந்நிலையில் நடிகர் வடிவேலு மனதை திருடி விட்டாய் படத்தில் பாடிய சிங் இன் தி ரெய்ன் பாடலை தற்போது மீண்டும் பாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபு தேவா
நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் மனதை திருடி விட்டாய். இந்தப் படத்தில் அவருடன் சேர்ந்து கல்லூரி மாணவராக நடித்திருப்பார் வடிவேலு. இந்தப் படத்தில் வடிவேலு பாடும் சிங் இன் தி ரெய்ன்… ஐ அம் சிங் இன் தி ரெய்ன்… பாடல் செம ஹிட்டானது.

இந்நிலையில் தற்போது பிரபு தேவாவை சந்தித்துள்ள வடிவேலு அவரை அணைத்தப்படி அதே பாடலை பாடியுள்ளார். இந்த வீடியோவை நட்பு என்ற கேப்ஷனுடன் பிரபு தேவா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.