சித்திரை திருவிழா கூட்ட நெரிச்சலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் சித்திரை திருவிழா இரணாண்டுகளுக்கு பிறகு நேற்று அதிவிமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இந்த திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிக்கி ஒரு பெண்ணும், ஆணும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கூட்டநெரிசலில் சிக்கி 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்படுள்ளதாவது,
மதுரை,சித்திரைத் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கவர்னர், ஆர்.என்.ரவி, ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பத்திகிறேன் என தெரிவித்துள்ளார்.