டுவிட்டரில் இணைந்த சசிகலா!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுக முன்னாள் பொதுச் செயலருமான வி.கே.சசிகலா சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், சொத்துகுவிப்பு வழக்கில் அவர் சிறை சென்ற நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதனை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சசிகலா. ஆனால், அதிமுக பொதுச் செயலர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சிறையில் இருந்து வந்த பிறகு, சசிகலா தமிழகத்தில் உள்ள முக்கியமான பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். பொதுமக்களும், அவரது ஆதரவாளர்களும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அவரும் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்திருக்கிறார் வி.கே.சசிகலா.

டுவிட்டரில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சில மணி நேரங்களிலேயே ஆயிரத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

வொய்ஃப் தொல்லை தாங்க முடியலை…’ சொந்த காருக்கு தீ வைத்த பா.ஜ.க பிரமுகர்

டுவிட்டரில் என்றும் அம்மாவின் வழியில்… என்று குறிப்பிட்டுள்ளார் சசிகலா.

முதல் டுவீட்டாக சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் ரோப் கார் திட்டத்தை தாங்கள் செய்ததாக தம்பட்டம் அடிப்பதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்துள்ளார்.
பின்னர், தீரன் சின்னமலை பிறந்த தினத்தையொட்டி, ஒரு டுவீட் வெளியிட்டுள்ளார்.

அந்த டுவீட்டில் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை துணிச்சலோடு எதிர்த்து நின்று, நம் மண்ணை காக்க போராடிய மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினமான இந்நன்னாளில் அவர்தம் வீரத்தையும், தியாகத்தையும் போற்றிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் நாளையொட்டியும் அவர் ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகெங்கிலும் வாழும் கிறுஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும், கருணையே வடிவான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடும் இந்நன்னாளில் கிறுஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

லேட்டஸ்டாக,”மக்களால் நாம், மக்களுக்காகவே நாம்… என்றும் அம்மாவின் வழியில்” என்ற பதிவை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.