டெல்லியில் ராணுவ தளபதிகள் மாநாடு: 5 நாட்கள் நடக்கிறது

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எல்லையில் நிலவும் பிரச்னைகள், சவால்கள் குறித்து ஆலோசிக்கவும். ராணுவத் தளபதிகளின் மாநாடு ஆண்டுதோறும் ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ராணுவ உயர்மட்ட தளபதிகள் பங்கேற்கும் 5 நாள் மாநாடு, ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே தலைமையில், டெல்லியில் இன்று முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த மாநாட்டில் எல்லைப் பகுதிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் ராணுவத்தை நவீனமயமாக்குவது, முக்கிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், ரஷ்யா-உக்ரைன்  போரால் ஏற்படும் தாக்கம், இ-வாகனங்களை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல்  தொடர்பான திட்டங்கள், சீனா உடனான எல்லை பிரச்னை, படைகளை அதிகரிப்பது, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 21ம் தேதி உரையாற்றுவார்,’ என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.