தங்கம் விலையானது கடந்த இரண்டு வாரங்களாகவே அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்படுகிறது.
இது இந்திய கமாடிட்டி சந்தையில் 10 கிராமுக்கு 53,000 ரூபாய் என்ற லெவலில் கடந்த அமர்வில் முடிவடைந்தது. இதே வெள்ளியின் விலையானது 69000 ரூபாய் என்ற லெவலிலும் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் வரும் வாரத்திலும் இந்த ஏற்றம் தொடருமா? அல்லது குறையுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.
கவனம்.. பேவரைட் பங்கில் முதலீடு குறைப்பு.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அதிரடி.. ஏன்!
மீடியம் டெர்மில் இலக்கு
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1970 டாலர்களை உடைத்துள்ளது. இது முடிவு விலை அடிப்படையில் மீடியம் டெர்மில் 2020 டாலர்கள் என்ற லெவலை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இது சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கம், வரவிருக்கும் திருமண பருவங்கள், என பலவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவையை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை
மீடியம் டெர்ம் குறித்து ரிலீகேர் புரோக்கிங் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, தங்கத்திற்கு சாதகமாக பல காரணிகளும் உள்ளன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பானது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலையில் பெரியளவிலான ஏற்றம் ஏதும் இருப்பின் அது தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம்.
பணவீக்கம் Vs தங்கம்
ஏனெனில் மிக முக்கிய எரிபொருளான கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது, அது சர்வதேச நாடுகளில் மேலும் பணவீக்கத்தினை தூண்டலாம். ஆக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் மீண்டும் அதிகரிக்கலாம்.
உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை
உக்ரைன் ரஷ்யா பிரச்சனையானது தற்போது வரையில் மிக மோசமான போராக நீண்டு கொண்டுள்ளது. இது மேற்கொண்டு நீடிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையினை இது ஊக்குவிக்கலாம். டாலரின் போக்கும் தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கும் என்பதால் அதுவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
சீனாவின் நெருக்கடியான நிலை
மேலும் தற்போது சீனாவில் பரவி வரும் கொரோனா காரணமாக அங்கு கடுமையான லாக்டவுன் நிலவி வருகின்றது. இதுவும் தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம். நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஜிடிபி வளர்ச்சியானது பாதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது குறித்தான அறிவிப்பும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
பொருளாதார வளர்ச்சி பற்றிய கவலை
இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய, ஃபெடரல் வங்கியின் தலைவர் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் சர்வதேச பொருளாதாரம் மற்றும் சீனாவின் ஜிடிபி குறித்தான கருத்தும், சந்தையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
டாலரின் நிலையற்ற தன்மையால் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்திய சந்தையினை பொறுத்தவரையில் ரூபாயின் மதிப்பும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களில் ரூபாயின் மதிப்பும் உள்ளது.
அமெரிக்காவின் ஐஐபி டேட்டா
அமெரிக்காவின் தொழில் துறை உற்பத்தி குறித்தான தரவானது வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது. ஆக இதுவும் அமெரிக்க பொருளாதாரத்தினை சுட்டிக் காட்டும் ஒரு முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இந்த தரவானது எதிர்மாறாக வரும் பட்சத்தில் தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம்.
Gold prices could follow by these 5 important things in the short term
Gold prices could follow by these 5 important things in the short term/தங்கம் இனி எப்படியிருக்கும்.. விலை குறையுமா.. கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்?