நாங்கள் பட்டினியாகக் கிடந்து செத்தால் கட்டையில் எரிக்காமல் கரண்டில் எரிப்பது வளர்ச்சி அல்ல! சீமான் காட்டம்


நாங்கள் பட்டினியாகக் கிடந்து செத்துவிட்டால், கட்டையில் எரிக்காமல் கரண்டில் எரிப்பது வளர்ச்சி அல்ல என சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது மயங்கி விழுந்தார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீட்டில் சிலநாள்கள் ஓய்வெடுத்து வந்தார். தற்போது மீண்டும் உற்சாகமாகக் களத்தில் இறங்கியுள்ளார் சீமான்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கல்வி, உணவு, மருத்துவம், போக்குவரத்து, இராணுவம் என அனைத்தையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு வளர்ச்சி என பா.ஜ.க சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்வது?

தோட்டா முதல் பீரங்கி வரை அனைத்து ஆயுதங்களையும் வெளிநாட்டில் வாங்கிவைத்துக்கொண்டு, நீங்கள் யாரிடம் சண்டை போட்டு எங்களை காப்பாற்றப் போகிறீர்கள்?

மாநில ஆட்சியை எடுத்து கொண்டால் , தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே சாலைகள் சரியில்லை. பிரதான சாலையை விட்டு உள்ளே சென்றால் சாலைகள் சவக்குழியாக இருக்கிறது. தடையற்ற மின்சாரத்தை, இலவச கல்வியை, மருத்துவத்தை இவர்களால் தரமுடியவில்லை.

நாங்கள் பட்டினியாகக் கிடந்து செத்துவிட்டால், கட்டையில் எரிக்காமல் கரண்டில் எரிப்பது வளர்ச்சி அல்ல. இவர்கள் அறிவிப்பது எதுவும் வளர்ச்சித் திட்டங்கள் அல்ல கவர்ச்சித் திட்டங்கள் என கூறியுள்ளார்.
இந்தக் கேள்வியை நாம் கேட்டால் ஆன்டி இந்தியன், அப்பத்தா இந்தியன் எனப் பேசி நம்மைக் காலிசெய்துவிடுவார்கள்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.