நெல்சனுக்கு பதில் இவரா ? ரஜினி எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!

நெல்சன்
விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படமான
பீஸ்ட்
சில நாட்களுக்கு முன் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. என்னதான்
விஜய்
ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்கள் படத்திற்கு கலவையான விமர்சனங்களையே தந்துள்ளனர்.

படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நெல்சன் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் 169 ஆவது படத்தை இயக்கவிருக்கிறார்.

நெல்சனுக்கு போன் செய்த தளபதி..! அஜித் வழியை பின்பற்றுகிறாரோ ?

இதன் அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தை பார்த்த
ரஜினி
சற்று யோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. மேலும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்திற்கு எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களால் கடும் அப்சட்டில் இருப்பதாகவும் பேசப்படுகின்றது.

ரஜினி

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நெல்சனை வைத்து படம் எடுக்கலாமா வேண்டாமா என்ற முடிவை ரஜினியிடம் ஒப்படைத்து விட்டதாக தகவல்கள் வருகின்றன. மேலும் அப்படி நெல்சன்
தலைவர் 169
படத்தை இயக்கவில்லை என்றால் அட்லீ ரஜினியின் 169 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

நெல்சன்

இருப்பினும் இதெல்லாம் வதந்தியே, நெல்சன் தான் ரஜினியின் 169 ஆவது படத்தை இயக்குவார் என ரசிகர்கள் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.

வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள், வாழ்த்து தெரிவித்த ரஜினி…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.