மரியுபோலை துடைத்தெறிந்த ரஷ்ய ராணுவம்: ஆயுதங்களை கீழே போடுவதே ஒரேவழி என எச்சரிக்கை!


மரியுபோலின் அனைத்து நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் உக்ரைனிய படைகளை தங்கள் நாட்டு ராணுவம் வெளியேற்றி விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் மிக முக்கிய துறைமுகமான மரியுபோலை கைப்பற்றுவதற்காக பலவாரங்களாக சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள் சனிக்கிழமையான (நேற்று) அதன் அனைத்து நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் உக்ரைன் ராணுவ படைகளை துடைத்து எறிந்து விட்டதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளிட்டுள்ள அறிக்கையில், அசோவ் கடலில் அமைந்துள்ள துறைமுகமான மரியுபோலின் அனைத்து நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் உக்ரைனிய ராணுவ படைகளை அகற்றிவிட்டதாகவும், சில வீரர்கள் மட்டும் அசோவ்ஸ்டல் உலோக ஆலையில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தப்பியோடிய சில வீரர்களும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைவதே ஒரேவழி எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு இதுவரை உக்ரைன் எதுவும் பதில் வழங்காத நிலையில், மரியுபோல் நகரில் நடைபெற்ற தாக்குதலில் கிட்டத்தட்ட 4000 வீரர்கள் வரை உக்ரைன் இழந்து இருப்பதாகவும், சுமார் 1464 உக்ரைனிய அதிகாரிகள் ரஷ்யாவிடம் சரணடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

போர்க்கப்பல் மூழ்கிய பிறகு…முதல்முறையாக உலகிற்கு காட்டப்பட்ட மாலுமிகள்: ரஷ்யா அதிரடி!

இவை உக்ரைனுக்கு திறம்பபெறமுடியாத இழப்பு என தெரிவித்துள்ள ரஷ்யா, இதுவரை 23,367 நபர்களை உக்ரைன் இழந்து இருப்பதாக தெரிவித்து இருந்த நிலையில் , இதுகுறித்த எந்தவொரு ஆதாரத்தையும் வழங்கவில்லை.

மேலும் இவர்களில் எத்தனை நபர்கள் இறந்துள்ளார் எத்தனை நபர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள் என்ற தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.