முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா.. ஹெச்டிஎஃப்சி வங்கியின் முடிவென்ன?

தனியார் துறையை சேர்ந்த மிகபெரிய வங்கியான ஹெச்டிஎஃப்சி அதன் 4ம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. எனினும் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் கொடுக்கும் விதமாக டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

எனினும் இது குறித்தான விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மார்ச் 31, 2022ம் நிதியாண்டிற்காக டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பு வரலாம் என்றும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டதா.. கட்டாயம் இதை செய்யுங்க.. !

வங்கி குழு கூட்டம்

வங்கி குழு கூட்டம்

இவ்வங்கியின் குழு கூட்டம் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இது குறித்து இவ்வங்கி குழு பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியின் இக்கூட்டத்தில் கடந்த நிதியாண்டிற்காக டிவிடெண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வட்டி வருவாய் தான் காரணம்

வட்டி வருவாய் தான் காரணம்

இதற்கிடையில் இவ்வங்கியின் நிகரலாபம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4ம் காலாண்டில் 23% அதிகரித்து, 10,055.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அதன் நிகர வட்டி வருவாய் விகிதம் அதிகரித்த நிலையில் லாபமும் அதிகரித்துள்ளது. இதன் வட்டி வருவாய் விகிதமானது 18,872.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது தான் காரணமாகவும் பார்க்கப்படுகிறது. வருவாய் அதிகரித்துள்ள அதே நேரம் வாரக்கடனும் குறைந்துள்ளது. இதுவும் சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆண்டு லாபம் என்ன?
 

ஆண்டு லாபம் என்ன?

இவ்வங்கியின் 2021 – 2022ம் ஆண்டின் நிகரலாபம் 36,961.3 கோடி ரூபாயாகும். இதன் வளர்ச்சி விகிதம் 18.8% ஆகும். இதே இதன் நிகர வட்டி வருவாய் விகிதம் 72,009.6 கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டினை காட்டிலும் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

இணைப்புக்கு பிறகு பங்கு பரிமாற்றம்

இணைப்புக்கு பிறகு பங்கு பரிமாற்றம்

சமீபத்தில் இந்த வங்கியின் துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி,ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் இணையவுள்ளதாக அறிவித்தது. ஏற்கனவே நாட்டின் மிகப்பெரிய வங்கியாக செயல்பட்டு வரும் ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்த இணைப்பு பிறகு இன்னும் அதன் செயல்பாட்டினை விரிவாக்கம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த இணைப்பின் மூலம் ஹெச்டிஎஃப்சி வங்கியின் மதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஹெச்டிஎஃப்சி-ன் 25 பங்குகளுக்கு 42 பங்குகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இந்த இணைப்புக்கு பிறகு இவ்வங்கி பங்குகள் பரிமாற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் டிவிடெண்டுடன் சேர்ந்து மற்ற அறிவிப்புகளும் விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் கடைசியாக ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலையானது 1.91% குறைந்து, 1464.95 ரூபாயாக முடிவுற்று இருந்தது. இதே ஹெச்டிஎஃப்சி-யின் பங்கு விலையானது 1.95% குறைந்து, 2378.50 ரூபாயாகவும் முடிவடைந்தது. இவ்வங்கியின் காலாண்டு முடிவானது விடுமுறை நாளன்று வெளியானதால், திங்கட்கிழமையன்று வர்த்தகத்தில் மிகப்பெரிய மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

HDFC bank may consider Dividend for FY22 on April 23 meeting

HDFC bank may consider Dividend for FY22 on April 23 meeting/முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா.. ஹெச்டிஎஃப்சி வங்கியின் முடிவென்ன?

Story first published: Sunday, April 17, 2022, 13:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.