மீண்டும் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா
ஜப்பான் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது.
தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா சோதித்து வருகிறது.
முதல்வரான பாகிஸ்தான் பிரதமரின் மகன்!
பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் புஸ்தார் தனது ராஜினாமாவை மாகாண கவர்னர் சவுத்ரி முகமது சர்வாரிடம் வழங்கி இருந்தார். அவரும் அதனை ஏற்று கொண்டார்.
இதையடுத்து, பஞ்சாப் அமைச்சரவை கலைக்கப்பட்டது. இந்நிலையில், பஞ்சாப் முதல்வராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியை சேர்ந்த ஹம்சா ஷபாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பஞ்சாப் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹம்சா ஷபாஸ், பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரிப்பின் மகனாவார்.
மாலிக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்
முக்கியப் பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில் இந்தியர்களும், இந்திய வம்சாவளிகளும் உயர் பதவியில் அமர்த்தப்படுகின்றனர்.
தற்போது மாலி நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் ரச்சனா சச்தேவா கோர்ஹோனனை அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.
தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறையில் துணை உதவிச்செயலாளராகவும், அண்டை கிழக்கு விவகாரங்கள் மற்றும் ஆசிய விவகார பணியக ஒருங்கணைந்த நிர்வாக அலுவலகத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.
இலங்கையில் போராடும் போராட்டக்காரர்கள் – ஓர் பார்வை
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்
உக்ரைன் மீதான ரஷிய போர் 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. வடகிழக்கு நகரமான கார்கிவில் அடுக்குமாடி குடியிருப்பின்மீது ரஷிய படைகள் நடத்திய குண்டுவீச்சில் 7 மாத குழந்தை உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 34 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை பிராந்திய கவர்னர் ஓலே சினேகுபோவ் தெரிவித்தார்.
போர் தொடங்கிய நாள் முதல் ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ள மரியுபோல் நகரில் சண்டை தொடர்கிறது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil